Preethi Mukundhan:விஜய் சேதுபதியை அவ்ளோ பிடிக்கும்.. ஸ்டார் பட நாயகி கூல் ஸ்பீச்!

திருச்சி: நடிகர் கவின், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான ஸ்டார் படம் ரசிகர்களை கவர்ந்து தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்தப் படத்தில் நடித்துள்ள நடிகை பிரீத்தி முகுந்தன், விளம்பர படங்களில் நடித்ததன்மூலம் இந்தப் படத்தின் வாய்ப்பை பெற்றதாக தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார்.

ஸ்டார் படம் தனக்கு சிறப்பாக அமைந்துள்ளதாகவும் தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளதாகவும் பிரீத்தி தெரிவித்துள்ளார். மேலும் கோலிவுட்டிலும் அடுத்தடுத்த படங்களில் நடிக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூறியுள்ளார். பிரீத்தியின் பெற்றோர் மருத்துவர்கள் என்ற நிலையில், இவரும் இன்ஜினீயரிங் படிப்பை முடித்துள்ளார். ஆயினும் படங்களில் நடிப்பதில்தான் தன்னுடைய ஆர்வம் அதிகமாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Actress Preethi Mukundhan shared about her favourite actor in Kollywood

ஸ்டார் படம்: நடிகர் கவின், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்து மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்து வருகிறது ஸ்டார் படம். சினிமாவில் சாதிக்க துடிக்கும் இளைஞர் மற்றும் அவரது வாழ்க்கையில் அடுத்தடுத்து ஏற்படும் மாற்றங்களை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. முன்னதாக பியார் பிரேமா காதல் படம் மூலம் ரசிகர்களை ஈர்த்த இயக்குனர் இளம், ஸ்டார் படத்திலும் அதை தொடர்ந்துள்ளார். படம் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

நடிகை பிரீத்தி முகுந்தன்: இந்தப் படத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார் பிரீத்தி முகுந்தன். திருச்சியை சேர்ந்த இவர், முன்னதாக மாடலிங் மூலம் இந்தப் படத்தின் வாய்ப்பை பெற்றதாக கூறியுள்ளார். திருச்சியில் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்ததாகவும் ஸ்ரீரங்கம் கோயிலில் தன்னுடைய தோழிகளுடன் இணைந்து நடை போட்ட அனுபவங்கள் தன்னால் எப்போதுமே மறக்க முடியாதது என்றும் அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார். சிறுவயதில் தனக்கு விஜய்யை பிடித்ததாகவும் ஆனால் தற்போது விஜய் சேதுபதியை அவரது நடிப்பை மிகவும் விரும்புவதாகவும் பிரீத்தி முகுந்தன் தன்னுடைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

Actress Preethi Mukundhan shared about her favourite actor in Kollywood

விஜய் சேதுபதியை பிடிக்கும்: விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் விருப்பத்தையும் பிரீத்தி முகுந்தன் வெளிப்படுத்தியுள்ளார். இதே போல நடிகை திரிஷாவின் நடிப்பு தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஸ்டார் படத்தை தொடர்ந்து தெலுங்கில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சிறுவயதில் பரதநாட்டியம் கற்றுக் கொண்டது சினிமாவிற்கு தற்போது மிகவும் உதவிகரமாக உள்ளதாகவும் பிரீத்தி தெரிவித்துள்ளார். மேலும் சில தமிழ் படங்களில் நடிக்கவும் தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர்களில் நடிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

ரஜினியுடன் நடிக்க விருப்பம்: ஆனாலும் இயக்குனர்கள் சொல்லும் கதைக்களத்தில் நடிக்க தான் எப்போதுமே தயார் என்றும் பிரீத்தி தெரிவித்துள்ளார். தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்த விரும்புவதாகவும் ரஜினியுடன் இணைந்து நடிப்பதற்கும் ஆர்வமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். திருச்சி என்ஐடியில் படித்து பொறியியல் பட்டம் பெற்றாலும் தொடர்ந்து நடிப்பில் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆவதை விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனது முன்னேற்றத்திற்கு பெற்றோர்கள் தான் காரணம் என்று தெரிவித்துள்ள பிரீத்தி முகுந்தன், தென்னிந்திய மொழிகளில் ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X