ஜாக்கெட்டே அணியாமல் நடிக்க வைத்த பா. ரஞ்சித்.. தங்கலான் நடிகை வெட்கப்பட்டுக் கொண்டே சொன்ன விஷயம்!

சென்னை: சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் தங்கலான் திரைப்படம் ஹாலிவுட்டில் வெளியான அப்போகலிப்டா படம் போல ஆதிவாசிகளின் படமாக உருவாகி இருக்கிறது. ஆதிவாசி மக்கள் தங்கத்தை தேடி போகும் போது அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தான் இந்த படத்தின் கதை. கோலாரில் தங்கம் எப்படி கிடைத்தது அதற்காக ஏற்பட்ட உயிரிழப்புகள் உள்ளிட்ட விஷயங்களை அரசியலும், அழுத்தமும் நிறைந்த கதையாக பா. ரஞ்சித் உருவாக்கியுள்ளார்.

சியான் விக்ரம், பசுபதி, பார்வதி மற்றும் மாளவிகா மோகனன் உள்ளிட்டோருடன் இணைந்து நடிகை ப்ரீத்தி கரணும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தங்கலான் படத்திற்கான புரமோஷனை முன்னிட்டு யூடியூப் சேனல்களுக்கு ப்ரீத்தி கரணும் பேட்டியளித்து வருகிறார்.

Thangalaan Preethy Karan Chiyaan Vikram

சமீபத்தில், அளித்த பேட்டி ஒன்றில் தங்கலான் படத்தில் ஜாக்கெட் அணியாமல் நடித்த அனுபவங்களை வெட்கத்துடன் பகிர்ந்து கொண்டார்.

யாரு இந்த ப்ரீத்தி கரண்?: பிரசாத் ராமர் இயக்கத்தில் வெளியான 'நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே' படத்தில் நடித்து கோலிவுட்டில் அறிமுகமானவர் தான் ப்ரீத்தி கரண். மாடலிங்கில் அதிக ஆர்வத்துடன் செயல்பட்டு வந்த இவர் ஏகப்பட்ட போல்ட் போட்டோஷூட்களையும் நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுக்கியுள்ளார். தங்கலான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர் அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ட்ரெயின் படத்திலும் நடித்துள்ளார்.

Thangalaan Preethy Karan Chiyaan Vikram

ஜாக்கெட் அணியாமல் நடித்தேன்: தங்கலான் படத்தில் நடிக்க நீலம் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து 2022ம் ஆண்டு போன் கால் வந்தது. பா. ரஞ்சித் சார் படங்களில் எப்போதுமே பெண் கதாபாத்திரங்களுக்கு வலுவான கேரக்டர் ஆர்க் இருக்கும். இந்த படத்தில் எனக்கும் அதுபோல ஒரு கதாபாத்திரம் என்றதும் நடிக்க சம்மதித்தேன். டெஸ்ட் ஷூட் நடத்தும் போது பீரியட் படம் என்பதால் ஜாக்கெட் அணியாமல் சேலை அணிந்து நடிக்க வேண்டும். ஸ்டூடியோவில் சிலர் மட்டுமே இருந்ததால் ஒன்றுமே தெரியவில்லை. போட்டோஷூட்டுக்கு ஜாலியாக நடித்துக் கொடுத்தேன்.

Thangalaan Preethy Karan Chiyaan Vikram

செட்ல ஒரு மாதிரி ஆகிடுச்சு: ஆனால், செட்டுக்கு சென்றதும் வெட்ட வெளியில் பல பெண்கள் ஜாக்கெட் அணியாமல் வெறும் சேலை மட்டுமே கட்டிக் கொண்டு நடித்தனர். அப்போதான் ஒரு மாதிரி ஆனது. மற்றொரு பக்கம் ஆண்கள் கோவணம் கட்டிக் கொண்டு ரொம்பவே சின்ன டிரெஸ்ஸில் ஆதிவாசிகளாகவே மாறிய நிலையில், சியான் விக்ரம் சார் லுக்கை எல்லாம் பார்த்து ஸ்டன்னாகி விட்டேன். இதற்கு முந்தைய படங்களில் எல்லாம் இந்த எக்ஸ்பீரியன்ஸ் கிடைத்ததில்லை. தங்கலான் படத்தில் நடித்த அனுபவம் வாழ்நாளில் மறக்கவே முடியாது என இளம் நடிகை ப்ரீத்தி கரண் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Thangalaan Preethy Karan Chiyaan Vikram

சுதந்திர தின ரிலீஸ்: இந்த ஆண்டு சுதந்திர தினத்துக்கான சரியான ரிலீஸாக தங்கலான் திரைப்படம் இருக்கும் என எதிபார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்த படக்குழுவும் உயிரைக் கொடுத்து நடித்துள்ளனர். ஏகப்பட்ட ரிஸ்க் எடுத்து இந்த படத்தை பா. ரஞ்சித் உருவாக்கியுள்ளார். ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகவுள்ள இந்த படம் தமிழ் சினிமாவுக்கு சிறப்பான படமாக அமையும் என்றே பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா மற்றும் அருள்நிதியின் டிமாண்டி காலனி 2 படங்களும் போட்டியாக வெளியாகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X