சக்ஸஸ்.. லாக்டவுனில் கணவருக்கு முடி வெட்டிவிட்ட பிரபல நடிகை.. பாராட்டி தள்ளிய பிரபல ஹீரோ!
சென்னை: லாக்டவுன் அமலில் உள்ள நிலையில் பிரபல நடிகை தனது கணவருக்கு முடி வெட்டி விட்ட போட்டோக்கள் வைரலாகி வருகிறது.
Recommended Video
பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவர் பிரீத்தி ஜிந்தா. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட்டில் கொடி கட்டி பறந்து வருகிறார்.
கடந்த 2016ஆம் ஆண்டு ஜெனே குட்டினஃப் என்ற அமெரிக்கரை திருமணம் செய்து கொண்டார். ஜெனே அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் நிறுவனத்தில் துணைத் தலைவராக உள்ளார்.

சலூன் கடைகள்
இந்நிலையில் உலகை ஆட்டிப் படைத்து வரும் கொரோனாவால் உலகம் முழுக்க பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பிரபலங்கள் பலரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். ஊரடங்கு காரணமாக சலூன் கடைகள் பலவும் மூடப்பட்டுள்ளன.

கணவருக்கு ஹேர் கட்
இதனால் பலரும் முடி வெட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். பிரபலங்கள் பலரும் தங்களின் கணவருக்கு தாங்களே முடி வெட்டி விட்டு வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட்டின் பிரபல நடிகையான பிரித்தி ஜிந்தா தனது கணவருக்கு முடி வெட்டி விட்டுள்ளார்.

அட்டகாசமாய் வெட்டியிருக்கிறார்
முடி வெட்டும் போது எடுக்கப்பட்ட வீடியோக்களையும், முடி வெட்டியப் பிறகு எடுத்த போட்டோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். சும்மா சொல்லக்கூடாது.. கணவருக்கு அவ்வளவு அட்டகாசமாய் ஹேர் கட் செய்திருக்கிறார்.

நல்லா இருக்கா?
மேலும் ஹேர் கட் சக்ஸஸ்ஃபுல்.. ஹப்பி ஹேப்பி.. நான் நிம்மதியாக இருக்கிறேன், மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்.. நீங்கள் எல்லோரும் என்ன நினைக்கிறீர்கள்? ஹேர்கட் நல்லா இருக்கிறதா? அடுத்தது யாருடையது? என பதிவிட்டுள்ளார் நடிகை பிரித்தி ஜிந்தா.

பிரபலங்கள் பாராட்டு
பிரித்தி ஜிந்தாவின் இந்த பதிவை பார்த்த நடிகர் ஹிருத்திக் ரோஷன், முன் எப்போதையும் விட சிறப்பாக உள்ளது என பாராட்டி தள்ளியிருக்கிறார். நடிகை தியா மிர்ஸா மற்றும் பாலிவுட்டின் பிரபலமான தினே பாண்டே உள்ளிட்டோரும் அவரது ஹேர் கட் புரஃபஷனலாக உள்ளது என பாராட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











