அனிருத்தை காதலிக்கவில்லை... நாங்கள் நண்பர்கள் தான்: பிரியா ஆனந்த்

சென்னை: அனிருத்தைக் காதலிப்பதாக பரவிய செய்தி உண்மையில்லை என மறுத்துள்ளார் நடிகை பிரியா ஆனந்த்.

வாமணன், எதிர்நீச்சல், வணக்கம் சென்னை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் நடிகை பிரியா ஆனந்த். இவர் தற்போது விக்ரம் பிரபு ஜோடியாக அரிமா நம்பி, விமல் ஜோடியாக ஒரு ஊர்வல ரெண்டு ராஜா, அதர்வாவுடன் இரும்புக் குதிரை, கவுதம் கார்த்திக்குடன் வைராஜாவை படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், பிரியா ஆனந்தும் இசையமைப்பாளர் அனிருத்தும் காதலிப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால், அத்தகவலை மறுத்துள்ளார் பிரியா ஆனந்த்.

கொலைவெறி அந்தஸ்து...

கொலைவெறி அந்தஸ்து...

‘3' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இசையமைப்பாளர் அனிருத், தனது முதல் படத்திலேயே கொலைவெறி பாடலைத் தந்து முன்னணி இசையமைப்பாளர் அந்தஸ்த்தைப் பிடித்தார்.

ஆண்ட்ரியா...

ஆண்ட்ரியா...

அதனைத் தொடர்ந்து அனிருத்தும், நடிகை ஆண்ட்ரியாவும் காதலிப்பதாக இணையத்தில் புகைப்படங்களுடன் செய்தி பரவியது. பின்னர், இருவரும் பிரிந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

காதல்...

காதல்...

இந்நிலையில், தற்போது நடிகை பிரியா ஆனந்த்தும், அனிருத்தும் காதலிப்பதாக தகவல் வெளியானது. பிரியா ஆனந்த் நடிப்பில் உருவான எதிர் நீச்சல், வணக்கம் சென்னை படங்களுக்கு அனிருத் இசையமைத்திருந்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

உண்மையில்லை...

உண்மையில்லை...

ஆனால், இத்தகவலை பிரியா ஆனந்த் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாக செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘என்னையும் அனிருத்தையும் இணைத்து வதந்திகள் பரவி உள்ளன. இதில் துளியும் உண்மை இல்லை.

நண்பர்கள் தான்...

நண்பர்கள் தான்...

நாங்கள் இருவரும் நண்பர்களாகத்தான் பழகுகிறோம். வேறு எந்த உறவும் எங்களுக்குள் இல்லை. இது போன்று வதந்திகள் பரப்பு வதை நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்' என இவ்வாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X