ஸ்கூல் யூனிபார்மில்.. நடுக்காட்டில் நாயுடன் பிரபல நடிகை !
சென்னை : எல்கேஜி படத்தை தொடர்ந்து மீண்டும் ஆர்ஜே பாலாஜி உடன் இணைந்து பிரபல ஹிந்தி திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார் பிரியாஆனந்த்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் க்யூட்டான நடிகையாக ரசிகர்களை கவர்ந்து வரும் இவர் ஆதித்ய வர்மா படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
சமூக வலைதளங்களில் அண்மைக்காலமாக சில சர்ச்சைக்குரிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி அளித்து வரும் பிரியா ஆனந்த் இப்பொழுது நடுகாட்டில் ஸ்கூல் யூனிபார்ம் காஸ்ட்யூமில் மடியில் நாய்க்குட்டியை வைத்துக்கொண்டு வெளியிட்டுள்ள க்யூட்டான புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது.

பாலிவுட்டையும் விட்டுவைக்கவில்லை
ஜெய் நடிப்பில் வெளியான வாமனன் படத்தின் மூலம் கதாநாயகியாக முதல்முறையாக அறிமுகமான பிரியாஆனந்த் அதைத்தொடர்ந்து உடனடியாகவே தெலுங்கு திரைப்படங்களிலும் அறிமுகமாகி தன்னுடைய நடிப்பு வேட்டையை ஆரம்பித்தார். க்யூட்டான நடிப்புடன் சேர்ந்து திகட்டாத கவர்ச்சியையும் காட்டி பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ள இவர் பாலிவுட்டையும் விட்டுவைக்கவில்லை.

எல்கேஜி
ரேடியோவில் தொகுப்பாளராக இருந்த ஆர்ஜே பாலாஜி படங்களில் காமெடி நடிகராக நடிக்க ஆரம்பித்து பின் ஹீரோவாக அறிமுகமான எல்கேஜி என்ற பிளாக் பஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த பிரியா இப்பொழுது மீண்டும் ஆர்ஜே பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் பிரபல ஹிந்தி திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தி சிம்பிள் மர்டர்
முகம் சுளிக்காத அளவுக்கு அனைவரும் ரசிக்கின்ற வகையில் மட்டுமே இதுவரை திரைப்படங்களில் கவர்ச்சியை காட்டி வந்த இவர் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமான ஆதித்ய வர்மா படத்தில் சர்ச்சைக்குரிய பல காட்சிகளில் நடித்து பார்க்கும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது மட்டுமல்லாமல் அதில் சிறந்த துணை நடிகைக்கான பாராட்டுகளையும் பெற்றிருந்தார். இந்தியில் சமீபத்தில் வெளியான தி சிம்பிள் மர்டர் வெப் சீரிஸ் இவருக்கு மேலும் மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது.

மடியில் பொம்லேபீ
கவர்ச்சி உடைகள் மட்டுமல்லாமல் கண்களுக்கு குளிர்ச்சியான ஸ்கூல் யூனிபார்ம் மாதிரி பச்சை நிற மாடர்ன் டிரஸ்ஸில் நடுக்காட்டில் உட்கார்ந்துகொண்டு முன்னழகு தெரிய விட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ள பிரியா அதில் ஒரு புகைப்படத்தில் மடியில் தான் வளர்த்து வரும் செல்ல நாய்க்குட்டி பொம்லேபீயை வைத்துக்கொண்டு இருக்கும் க்யூட்டான புகைப்படத்தையும் பதிவிட பலரும் இந்தப்படத்திற்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











