காசு.. பணம்.. துட்டு மணி... சிவகார்த்திகேயன் பட நடிகையின் அடாவடி பிக்ஸ்!
சென்னை : சிவகார்த்திகேயனுடன் எதிர் நீச்சல் திரைப்படத்தில் ஜோடி போட்டு நடித்த பிரியா ஆனந்த் இப்பொழுது பண மாலை அணிந்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் வெளியான எல்கேஜி மற்றும் ஆதித்ய வர்மா உள்ளிட்ட திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய பிரியா ஆனந்த் இப்பொழுது கன்னடத்தில் உருவாகிவரும் ஜேம்ஸ் மற்றும் ஆர்டிஎக்ஸ் போன்ற படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஹிந்தியில் இவர் நடித்து வந்த வெப் சீரிஸ் இப்பொழுது ரிலீஸ் ஆகி ஹிட்டடித்த நிலையில் இந்த வெப் சீரிஸின் ப்ரமோஷனுக்காக பணம் மாலை அணிந்து கொண்டு மாஸாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இப்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டீச்சராக நடித்து
தமிழ் குடும்பத்தில் பிறந்த பிரியா ஆனந்த் 5ம் மேற்பட்ட மொழிகளில் சரளமாக பேசக்கூடிய திறமைவாய்ந்த நடிகை ஆவார். ஜெய் நடித்த வாமனன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்ட இவர் அதைத்தொடர்ந்து 180, இங்கிலீஷ் விங்கிலீஷ் போன்ற திரைப்படங்களில் நடித்து வர சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த எதிர்நீச்சல் திரைப்படத்தில் டீச்சராக நடித்து கலக்கி இருப்பார்.

கைவசம் நிறைய படங்களுடன்
எதிர்நீச்சல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியா ஆனந்த் என இருவருக்குமே ஜாக்பாட் அடித்தது போல அடுத்தடுத்து திரைப்படங்களில் ஒப்பந்தமாக பிரியா வணக்கம் சென்னை, அரிமா நம்பி, இரும்புக்குதிரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, வை ராஜா வை என தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை அசர வைத்ததோடு தெலுங்கு கன்னடம் ஹிந்தி மலையாளம் என மற்ற மொழிகளிலும் கைவசம் நிறைய படங்களுடன் வலம் வந்தார்.

வெப் சீரிஸில்
சமீபத்தில் வெளியான ஆதித்ய வர்மா திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய படுக்கையறை காட்சிகள் முத்தக்காட்சிகள் என நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்த இவர் இப்பொழுது ஹிந்தியில் வெளியாகி சக்கைபோடு போட்டு வரும் "தி சிம்பிள் மர்டர்" என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார்.

பண மாலையை அணிந்து
"தி சிம்பிள் மர்டர்" வெப் சீரிஸ் ஏற்கனவே ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நிலையில், வெப் சீரிஸின் ப்ரமோஷனுக்காக 2000 ரூபாய் தாள்களால் ஆன பண மாலையை அணிந்து கொண்டு சோபாவில் செம கெத்தாக தொடை அழகை காட்டிக்கொண்டு பிரியா ஆனந்த் வெளியிட்டுள்ள இந்த கண்களுக்கு குளிர்ச்சியான மாஸ் புகைப்படங்கள் இப்பொழுது சோசியல் மீடியாக்களை தெறிக்கவிட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











