மின்விளக்கு வெளிச்சத்தில் ஜொலிக்கும் டாக்டர் பட நடிகை... எம்புட்டு அழகு!
சென்னை : அறிமுகமாகி சில வருடங்களிலேயே கை நிறைய படங்களில் நடித்து வருகிறார் டாக்டர் பட நாயகி ப்ரியா அருள் மோகன்.
சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைந்து டான் படத்தில் நடித்து வரும் ப்ரியா அருள் மோகனுக்கு சூர்யா உடன் ஜோடி போடும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.
இந்த நிலையில் தெலுங்கிலும் சில திரைப்படங்களில் நடித்து வர ஸ்ரீகாரம் படத்தின் ப்மோஷனுக்காக மின்விளக்கு வெளிச்சத்தில் ஜொலிக்கும் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டும் வருகிறார்.

புது வரவாக
தமிழில் நடித்த முதல் திரைப்படமே இன்னும் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே அடுத்தடுத்து இரண்டு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் நடிகை ப்ரியா அருள்மோகன் இப்பொழுது தமிழ் சினிமாவிலேயே அனைவராலும் உற்று நோக்கப்படும் புது வரவாக உள்ளார்.

கல்லூரி கதைக்களத்தை
கோலமாவு கோகிலா படத்திற்கு பிறகு இயக்குனர் நெல்சன் இயக்கி வரும் டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருக்க அதில் கதாநாயகியாக களம் இறக்கப்பட்டு இருக்கும் ப்ரியா அருள் மோகன் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அட்லீயின் உதவி இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கி வருகிறார். கல்லூரி கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது.

ஸ்ரீகாரம்
இந்த நிலையில் தெலுங்கில் கேங் லீடர் படம் மாபெரும் வெற்றி பெற அதைத் தொடர்ந்து சர்வானந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ஸ்ரீகாரம் படத்திலும் ப்ரியா நடித்துள்ளார். விரைவில் ரிலீசாக இருக்கும் இந்த படத்திற்கான ப்ரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது.

வெளிச்ச பூவே மாதிரி
ஸ்ரீகாரம் படத்தின் ப்ரமோஷனுக்காக நடிகை ப்ரியா அருள் மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்க அதில் மின்விளக்கு வெளிச்சத்தில் வெளிச்ச பூவே மாதிரி ஜொலிக்கும் இவரின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











