தமன்னாவை விட நான் ரொம்ப ஹாட்.. கிளாமரில் இறங்கி அடிக்கும் பிரியா பவானி சங்கர்!

சென்னை: நடிகை பிரியா பவானி ஷங்கர் இணையத்தில் பிளாக் அண்ட் பிளாக்கில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு பிசியான நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கர் கார்த்தி, அருண் விஜய், எஸ் ஜே சூர்யா போன்ற பல முக்கியமான நடிகர்களின் படங்களில் லீடு ரோலில் நடித்து பிரபலமான நடிகையாக இருக்கிறார்.

actress priya bhavani shankar black and black look

தற்போது இவர் இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அடுத்தடுத்த படங்களில்: சின்னத்திரையில் இருந்து வந்த பிரியா பவானி சங்கருக்கு சினிமாவில் பிரகாசமான எதிர்காலம் உள்ளது. இந்த ஆண்டில் அதிகமான படங்களில் நடித்த நடிகையாக பிரியா பாவனி சங்கர் இருக்கிறார்.ஜெயம் ரவியுடன் அகிலன், பத்து தல, ருத்ரன், பொம்மை என அடுத்தடுத்த படங்களில் நடித்து உள்ளார். அண்மையில் இவர் எஸ்.ஜே சூர்யாவுடன் இணைந்து பொம்மை படத்தில் நடித்திருந்தார். இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்று, கணிசமான வசூலை பெற்றது.

actress priya bhavani shankar black and black look

தயாரிப்பாளர்களுக்கு பிடித்த நடிகை: தமிழ் படங்களில் மட்டுமே நடித்து வந்த பிரியா பாவனி சங்கர் தெலுங்கிலும் பிரபலமாகிவிட்டார். என்னத்தான் தமிழில் படவாய்ப்பு குவிந்தாலும், சம்பளத்தை அதிகரிக்காமல், பேரம் பேசாமல், கால்ஷீட்டை சரியாக கொடுத்துவிடுவதால், நடிகை பிரியா பாவனி சங்கருக்கு என்று தயாரிப்பாளர்கள் மத்தியில் நல்ல பெயர் உண்டு. இதனால், அவர் தயாரிப்பாளர்களின் முதல் சாய்ஸாக இருக்கிறார்.

actress priya bhavani shankar black and black look

விறுவிறுப்பான படப்பிடிப்பு: தற்போது இவரின் கைவசம், இந்தியன் 2, டிமான்டி காலனி 2, ஜீப்ரா, அரண்மனை 4, ஹரி இயக்கத்தில் உருவாக உள்ள பெயரிடப்படாத படம் ஒன்றிலும், வரிக்குதிரை என்ற தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

actress priya bhavani shankar black and black look

நான் ரொம்ப ஹாட்: சோசியல் மீடியாக்களிலும் அவ்வப்போது விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வரும் பிரியா பவானி சங்கர் தற்போது பிளாக் அண்ட் பிளாக்கில் போட்டோவை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த பேன்ஸ் தமன்னா என்ன தமன்னா, அதை விட நான் ரொம்ப ஹாட் என்பதை பிரியா பவானி ஷங்கர் சொல்லாமல் சொல்லிவிட்டார் என்று கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X