சினிமா பிஸியிலும் சிறிய பிரேக்.. கடற்கரையில் ஜாலியாக பிரியா பவானி சங்கர்!

சென்னை: நடிகை பிரியா பவானி சங்கர் சமீபத்தில் கடற்கரையில் ஜாலியாக காற்றுவாங்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் பகிர்ந்த இந்தப் பதிவு, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது மீடியா பயணத்தை தொடங்கியவர் பிரியா பவானி சங்கர். தன்னம்பிக்கையான தோற்றமும் தெளிவான பேச்சும் காரணமாக ஆரம்பத்திலேயே கவனம் பெற்ற அவர், அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கல்யாணம் முதல் காதல் வரை' என்ற சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அந்த சீரியல் அவரை வீடு வீடாக அறிமுகப்படுத்தியதுடன், நடிகையாக அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.

Priya bhavani shankar instagram
Photo Credit:

பிரியா பவானி சங்கர்: சின்னத்திரையில் கிடைத்த புகழை தொடர்ந்து, 'மேயாத மான்' படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். அந்த படம் அவருக்கான முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து 'கடைக்குட்டி சிங்கம்', 'மான்ஸ்டர்' போன்ற படங்களில் நடித்த அவர், தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். அதே நேரத்தில் சில தோல்விப் படங்களும் அவரின் திரைப் பயணத்தில் இருந்தாலும், அதனால் அவர் மனம் தளராமல் தொடர்ந்து வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டார். சமீபத்தில் வெளியான 'டிமான்டி காலனி 2' படம் பிரியா பவானி சங்கருக்கு மீண்டும் ஒரு வெற்றியைத் தந்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, 'இந்தியன் 3', 'டிமான்டி காலனி 3', 'ஹாட்ஸ்பாட் 2' உள்ளிட்ட பல எதிர்பார்ப்புக்குரிய படங்களில் அவர் நடித்து வருகிறார்.

கடற்கரையில் செம ஜாலி: ஒருபுறம் திரை வாழ்க்கை பரபரப்பாக இருந்தாலும், மற்றொரு புறம் தனிப்பட்ட வாழ்க்கையில் அமைதியான நேரத்தை செலவிடுவதிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். சமீப காலமாக இன்ஸ்டாகிராமில் அதிகமாக செயல்படாத பிரியா பவானி, தனது காதலருடன் ஆஸ்திரேலியாவில் விடுமுறையை கழித்து வந்ததாக தகவல்கள் வெளியாகின. தற்போது மீண்டும் சென்னை ECR-ல் உள்ள தனது வீட்டிற்கு காதலருடன் திரும்பியுள்ளார். இந்நிலையில், கடற்கரையில் ஹாயாக காற்று வாங்கி நிற்கும் தனது புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். இயற்கை அழகும், அவரது சிம்பிளான ஸ்டைலும் அந்த புகைப்படத்தை மேலும் கவர்ச்சியாக்கியுள்ளது. "ரிலாக்ஸ் மோடு" என ரசிகர்கள் கமெண்ட் செய்து வரும் நிலையில், இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X