பணம் தான் முக்கியம்.. பணத்திற்காகத் தான் நடிக்க வந்தேன்.. பிரபல நடிகை ஓபன் டாக்!
சென்னை : பணத்திற்காகத்தான் நடிக்க வந்தேன் என்று நடிகை பிரியா பவானி சங்கர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சின்னத்திரையில் தொடர்களில் நடித்து பிரபலமாக நடிகை பிரியா பவானி சங்கர் இப்பொழுது தமிழ் சினிமாவின் இளம் நடிகையாக கலக்கி கொண்டு உள்ளார்.
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் இந்தியன் 2 படத்தில் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார்.

நடிகை பிரியா பவானி சங்கர்
நடிகை பிரியா பவானி சங்கர் ஏராளமான படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில், இவர் நடித்த கல்யாணம் கமனீயம் என்ற தெலுங்கு படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ந் தேதி வெளியானது. இப்படத்தில் சந்தோஷ் சோபனுடன் ஜோடி போட்டு நடித்திருந்தார். இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்
இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரியா பவானி சங்கர், சினிமாவில் நுழையும் போது மக்கள் என்னை ஏற்றுக் கொள்வார்களா? இல்லையா? என்பதை பற்றி நான் கவலைப்படவில்லை. இயல்பான கதைகளை தேர்வு செய்து நடித்தேன் அது மக்களுக்கு பிடித்துப்போனதால் என்னை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள். எதார்த்தமான வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் படங்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதுபோலத்தான் திருச்சிற்றம்பலம் படத்தில் சிறிய ரோலாக இருந்தாலும் பரவாயில்லை என நினைத்து அந்த படத்தில் நடித்தேன்.

பணம் தான் முக்கியம்
மேலும்,சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு படங்களில் நடிக்கவில்லை. படங்களில் நடித்ததால் பணம் வந்தது.பணத்திற்காகத்தான் படங்களில் நடித்தேன் பணம் தான் முக்கியம். சினிமா பின்னணி உள்ள குடும்பத்திலிருந்து வந்தவர்களே திரையுலகில் தங்களை நிரூபித்துக் கொள்ள நிறைய கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கும் நிலையில் நான் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் அதற்காக இப்போது உழைத்துக்கொண்டு இருக்கிறேன்.

முதலில் தெரிந்து கொள்ளுங்கள்
தொடர்ந்து பேசிய பிரியங்கா பவானி சங்கர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முட்டி தெரிய போட்டோ போட்டாலே அது கவர்ச்சி என்கிறார்கள். சுடிதார் போட்டாலும் கவர்ச்சி,புடவை கட்டினாலும் கவர்ச்சி , நைட்டி போட்டாலும் கவர்ச்சி என்று சொன்னால் எப்படி. முதலில், கவர்ச்சி என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள் என்றார். மேலும், இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்றார்.


Click it and Unblock the Notifications











