குட்டி டவுசரில் குந்த வைத்து உட்கார்ந்து இருக்கும் பிரியா பவானி சங்கர்!
சென்னை : இதுவரை கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த பிரியா பவானி சங்கர் வர வர கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார்.
களத்தில் சந்திப்போம் வெற்றிபெற்ற பிறகு மீண்டும் இரண்டு ஹீரோக்கள் நடிக்கும் திரைப்படங்களில் சென்டிமென்ட் ரீதியாக ஒப்பந்தமாகி வருகிறார்.
குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை வசியம் செய்து வந்த நடிகை பிரியா பவானி சங்கர் இப்போது குட்டி டவுசரில் குந்த வைத்து உட்கார்ந்துகொண்டு இருக்கும் லவ்லியான போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.

ஹீரோவாக ஹரிஷ் கல்யாண்
தெலுங்கில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த பெல்லி சூபுளு திரைப்படம் தமிழில் ஓ மணபெண்ணே என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட அதில் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார்.

படப்பிடிப்பு நேற்று முடிவடைந்து
2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நகைச்சுவைத் திரைப்படமான ஆடி கப்யாரே கோட்டமணி என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் அசோக் செல்வன் உடன் முதன் முறையாக ஜோடி போட்டு நடித்து இருக்க இதன் படப்பிடிப்பு நேற்று முடிவடைந்து படக்குழு அறிவித்து புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

அருண்விஜயின் 33வது படம்
தமிழ் சினிமாவில் உள்ள இளம் நடிகைகளிலேயே அறிமுகமான கொஞ்ச காலத்திலேயே அதிக எண்ணிக்கையிலான படங்களில் ஒப்பந்தமான நடிகை என்ற பெருமையை பெற்றுள்ள பிரியா பவானி சங்கர் இப்பொழுது இந்தியன்2,பொம்மை, ருத்ரன், ஓ மணப்பெண்ணே, குருதி ஆட்டம், பத்து தல மற்றும் அருண்விஜயின் 33வது படம் என படு பிஸியாக நடித்து வர தெலுங்கிலும் இவருக்கு எக்கச்சக்க வாய்ப்புகள் வருகிறது.

தொடை தெரிய
என்னதான் கை நிறைய படங்கள், முன்னணி நடிகர்களின் படங்கள் என பிரியா நடித்து வந்தாலும் இதுவரை ஒரு துளி கவர்ச்சி கூட காட்டாமல் நடித்து தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டிருந்தவர் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி காட்ட ஆரம்பித்துள்ளார் . சமீபகாலமாக இவர் சமூக வலைதளங்களில் பதிவிடும் புகைப்படங்கள் கவர்ச்சிக்கு ஆரம்ப புள்ளியாக இருக்க இப்பொழுது குட்டி டவுசரில் குந்த வைத்து உட்கார்ந்துகொண்டு விதவிதமாக போஸ் கொடுத்துக்கொண்டு இருக்கும் க்யூட் புகைப்படங்களை வெளியிட்டு அசத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications