போதும் போதும் லிஸ்ட் பெருசா போகுது.. எனக்கு இது தான் பிடிக்கும் லிஸ்ட் போட்ட பிரியா பவானி சங்கர்!
சென்னை : கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை பிரியா பவானி சங்கர்.
தனது நடிப்பு திறமையால் மேயாத மான் படத்தின் மூலம் வெள்ளித் திரையில் அறிமுகமானவர்.
தனக்கு பிடித்த விஷயத்தைப் பற்றி மனம் திறந்து லிஸ்ட் போட்டு கூறியுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.

சாதித்த நாயகி
சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து சாதித்தவர்கள் லிஸ்டில் மறக்க முடியாத நடிகை என்றால் அது பிரியா பவானி சங்கரும் ஒருவர் . செய்தி வாசிப்பாளராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய நடிகை பிரியா பவானி சங்கர் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரின் மூலம் பல ரசிகர்களை பெற்றார். அதன் பிறகு அவரது நடிப்பையும், திறமையையும் பார்த்த இயக்குநர்கள் வெள்ளித் துறையில் அறிமுகப்படுத்தினார்கள்.

செலெக்ட்டிவ் கதைகள்
மேயாத மான் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார் நடிகை பிரியா பவானி சங்கர், ரத்ன குமார் எழுதி, இயக்கிய இந்த படத்தில் வைபவ், இந்துஜா ரவிச்சந்திரன் போன்ற பலர் நடித்திருந்தனர். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், களத்தில் சந்திப்போம், ஓ மனப் பெண்ணே, ஹாஸ்டல், யானை என்று தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் பிரியா பவானி சங்கர் நடித்து வெளியான யானை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஹிட்டான யானை
யானை திரைப்படத்தை ஹரி இயக்கியுள்ளார். இந்த படத்தில் அருண் விஜய், சமுத்திரகனி, ராதிகா, யோகி பாபு போன்ற பலரும் நடித்துள்ளனர். தனக்கென தகுதியான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகை பிரியா பவானி சங்கர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருவார். தனக்கு பிடித்த விஷயங்களைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர் .

லிஸ்ட் ரொம்ப பெருசு
பிடித்த நடிகர்- மாதவன், பிடித்த லவ் ப்ரோபோசல் சீன்- காக்க காக்க, ஃபேவரைட் ஹீரோயின்- பார்வதி, பிடித்த உணவு- பிரியாணி, பிடித்த டெஸ்டினேஷன் - க்ரீஸ், ஆல் டைம் ஃபேவரைட் மூவி -முகவரி, பிடித்த வசனம் - ஆறுச்சாமி, ஃபேவரைட் டைரக்டர்- வெற்றிமாறன் , பிடித்த நிறம்- கருப்பு, பிடித்த காமெடி நடிகர் -வடிவேலு, பிடித்த இடம் - சென்னையில் என் வீடு, ஃபேவரைட் வில்லன்- அருண் விஜய், பிடித்த உடை- ட்ராக்ஸ் அண்ட் டி ஷர்ட் என்று தனக்கு பிடித்த விஷயங்களை அடுக்கிக்கொண்டே இருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.


Click it and Unblock the Notifications











