பெரிய ஹீரோ படத்தில் ஏமாற்றப்பட்டேன்.. அவருக்கே அந்த நிலைமைதான்.. ஷாக் கொடுத்த ப்ரியா பவானி சங்கர்

சென்னை: ப்ரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகையாக இருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக அவர் தமிழில் இந்தியன் 2 மற்றும் டிமான்ட்டி காலனி 2, பிளாக் ஆகிய படங்களில் நடித்திருந்தார். அவற்றில் இந்தியன் 2 படம் படுதோல்வியையும், டிமான்ட்டி காலனி 2 சூப்பர் ஹிட்டையும் பெற்றது. பிளாக் படத்துக்கு சுமாரான வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் அவர் கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தோன்றி; பிறகு சீரியலில் நடிக்க ஆரம்பித்தவர் ப்ரியா பவானி சங்கர். அதற்கு பிறகு மேயாத மான் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. முதல் பட வெற்றியைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. ஜெயம் ரவி, சிம்பு என முன்னணி நடிகர்களின் படத்திலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அவர் நடிப்பில் அகிலன், பத்து தல, ருத்ரன் ஆகிய படங்கள் வரிசையாக வெளியாகின. மூன்று படங்களுக்கும் சுமாரான வரவேற்பு கிடைத்தாலும் ப்ரியா பவானி சங்கருக்கு சூப்பரான வரவேற்பை ரசிகர்கள் கொடுத்திருக்கின்றனர்.

priya bhavani shankar indian 2 2

ராசியில்லாத நடிகை?: ப்ரியா பவானி சங்கர் கைவசம் இப்போது ஏராளமான படங்கள் இருக்கின்றன. அதேசமயம் அவர் நடித்திருந்த இந்தியன் 2, ரத்னம், ருத்ரன், பொம்மை உள்ளிட்ட அத்தனை படங்களுமே தோல்வியைத்தான் சந்தித்தன. இதன் காரணமாக அவர் ராசியில்லாத நடிகை என்று ஒருதரப்பினரால் கூறப்படுகிறது. இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில்கூட பல விஷயங்களை ஓபனாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

டிமான்ட்டி காலனி 2: ஆனால் அந்த முத்திரையை டிமான்ட்டி காலனி 2 படத்தில் கிழித்திருந்திருக்கிறார் பவானி. அவருக்கு நீண்ட நாட்கள் கழித்து ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் படமாக டிமான்ட்டி காலனி 2 கிடைத்தது. முக்கியமாக அந்தப் படத்தில் ப்ரியா பவானி சங்கருக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த முக்கியத்துவத்தை உணர்ந்து தனது நடிப்பையும் மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார் அவர். இப்போது ஜீவாவுடன் பிளாக் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது.

ப்ரியாவின் பேட்டி: இந்நிலையில் ப்ரியா பவானி சங்கர் அளித்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அவர் அளித்த பேட்டியில், "ஒரு பெரிய ஹீரோவின் படத்தில் நடித்தேன். என்னை வைத்து 55 நாட்கள் ஷூட் செய்தார்கள். வெயில், மழை என எதையும் பார்க்காமல் ஷூட்டிங் நடத்தினார்கள். ஷூட்டிங் முடிந்து டப்பிங்கிற்காக சென்றேன். அதில் அரை நாளுக்குதான் நான் நடித்தது இருக்கிறது. எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அந்தச் சம்பவம் கொடுத்துவிட்டது.

ஹீரோவுக்கே அதுதான் நிலைமை: உடனே நான் என்னிடம் சொன்ன கதை என்ன, இங்கே இருப்பது என்ன என்னை வைத்து ஷூட் செய்ததெல்லாம் எங்கே என்று கேட்டேன். அதற்கு அவர்களோ அதெல்லாம் மியூசிக்கில் வரும் என்றார்கள். எனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. உடனடியாக படத்தின் ஹீரோவுக்கு ஃபோன் செய்து கேட்டபோது நானே 135 நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டேன். எனது பல சீன்களே இல்லை. எனக்கே அதுதான் நிலைமை" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X