காதலனுக்காக புது ரெஸ்டாரன்ட்.. கலக்கும் பிரியா பவானி ஷங்கர்.. கட்டுனா அவள கட்டனும் டா!
சென்னை : நடிகை பிரியா பவானி ஷங்கர் புது ரெஸ்டாரன்ட் ஒன்றை விரைவில் தொடக்க இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து வந்த நடிகை பிரியா பவானி சங்கர் இப்பொழுது டாப் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் ஏராளமான படங்களில் கமிட்டாகி நடித் வருகிறார்.
தமிழ் ஆடியன்சை வளைத்துப்போட்ட அம்மணி தற்போது டோலிவுட்டிலும் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

காதலனுக்காக புது ரெஸ்டாரன்ட்
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பிரியா பாவனி ஷங்கர் புதிய ரெஸ்டாரன்ட் ஒன்று தொடங்கிய மகிழ்ச்சியான செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பகிர்ந்துள்ளார். மேலும், எங்களுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது. இதை உங்களிடம் அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். உணவகம் நடத்த வேண்டும் என்பது எங்களின் கனவை உயிர்ப்பிக்கிறோம், உங்கள் அனைவருக்கும் சேவை செய்ய காத்திருக்கிறோம் என்று பகிர்ந்துள்ளார்.

கட்டுனா அவள கட்டனும் டா
இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் காதலனுக்காக புது ரெஸ்டாரன்ட் தொடங்கி விட்டாரே என்றும் கட்டுனா அவள கட்டனும் டா என்று இந்த வீடியோவைப் பார்த்து ரசிகர்கள் ஏக்க பெருமூச்சு விட்டு வருகின்றனர். நடிகை பிரியா பாவனி சங்கர் அண்மையில், கடற்கரையை ஒட்டிய ஒரு வீட்டை வாங்கியுள்ளதாக, தனது காதலன் ராஜவேலுடன் இருக்கும் ரொமான்டிக் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

கை வசம் உள்ள படங்கள்
சின்ன திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்த பிரியா பவானி சங்கர், இன்று வெள்ளித்திரையில் முன்னணி நடிகைகளுகே சீனியர் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில், அகிலன், ருத்ரன், பொம்மை, பத்துதல, இந்தியன் 2, டிமாண்டி காலனி 2 போன்ற படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். சமீபத்தில் இவர் தெலுங்கு நடிகர் சத்யதேவ் கதாநாயகனாக நடித்த தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்து தெலுங்கு சினிமாவில் எண்ட்ரி கொடுத்துள்ளார்.

அடுத்தடுத்த படங்களில்
மான்ஸ்டர், மாபியா, களத்தில் சந்திப்போம், கசடதபற, ஓமணப் பெண்ணே, ஹாஸ்டல் என பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் ரசிகர் மத்தியில் தனி கவனத்தைப்பெற்ற பிரியா பாவனி சங்கர், அருண் விஜய்க்கு ஜோடியாக யானை படத்திலும், திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











