‘’நீ நினைத்த நொடியே பார்த்துவிட்டேன்’’… கவிதாயினியாக மாறிய பிரியா பவானி சங்கர் !
சென்னை: நடிகை பிரியா பவானி சங்கர் கிட்டத்தட்ட 10-க்கு மேற்பட்ட படங்களை கையில் வைத்துக்கொண்டு முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுத்து வருகிறார்.
இணையத்தில் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவர் பெரும்பாலும் தமிழில் ட்வீட் போடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.
தற்போது பிரியாபவானி சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அழகான கவிதையை பதிவிட்டு இருக்கிறார். இந்த கவிதைக்கு லைக்குகளும் கமெண்டுகளும் குவிந்து வருகின்றன.

திரைப்பயணம்
சின்னத்திரையில் கலக்கி வந்த பிரியா பவானி சங்கர் மேயாதமான் திரைப்படத்தின் வாயிலாக திரைத்துறையில் தனது பயணத்தை தொடங்கினார். அந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மான்ஸ்டர், கடைகுட்டி சிங்கம், மாஃபியா என பல வெற்றிப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

கைவசம் பல படங்கள்
கசட தபற, குருதி ஆட்டம், ஓ மணப்பெண்ணே, பொம்மை,ஹாஸ்டல், இந்தியன் 2, பத்துதல என கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். முன்னணி நடிகைகள் கூட ஒன்று இரண்டு படங்களை மட்டுமே வைத்திருக்கும் நிலையில், இவர் கை நிறைய படங்களை வைத்து இருக்கிறார்.
Recommended Video

குறைந்த சம்பளம்
அழகான உடல் வாகு, அழுத்தமான தமிழ் உச்சரிப்பால் அனைவரின் மனதிலும் இடம் பிடித்து விட்டார் பிரியா பவானி சங்கர். மேலும், தயாரிப்பாளரிடம் ஏதோ தானோ என்று சம்பளத்தை உயர்த்தி கேட்காமல் கதைக்கு ஏற்ப சம்பளத்தை கேட்பதால் பல தயாரிப்பாளர்களுக்கு பிடித்த நடிகையாகவே மாறிவிட்டார்.

கவிதாயினி
எத்தனை படங்களில் பிஸியாக நடித்தாலும், சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பதையே பெரும்பாலும் நடிகைகள் விரும்புகின்றன. இதேபோல இவருக்கு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் , ட்விட்டரில் புகுந்து விளையாடுகிறார். தற்போது இவர் தனது ட்விட்டர் கவிதாயினியாக மாறி நிலா குறித்து சூப்பரான கவிதை எழுதியுள்ளார்.

கவிதை கவிதை
அவ்வளவு இருட்டில் உன் அருகாமை மட்டும் போதுமானதாக இல்லை
இன்னும் வேண்டும் என்ற என் பேராசை, பெரு நிலவின் வெளிச்சத்தையும் சேர்த்துக்கொண்டு வளர்கிறது.
தனிமையில் உன் மார்பில் முகம் புதைத்து கரைய புதிய கவலைகள் எதுவும் என்னிடம் இல்லை.
இன்று உன்னுள் புதைக்க இந்த முகத்தில் புன்னகை மட்டுமே இருக்கிறது
வேறெந்த வார்த்தையும் தேவையில்லை
உன் கண்களில் நீ நினைத்த நொடியே பார்த்துவிட்டேன்..... என்று நிலா குறித்து ஒரு அழகான கவிதையை பகிர்ந்துள்ளார். அம்மணி திறமையான நடிகை மட்டுமல்ல கவிதை வடிப்பதிலும் திறமையானவர் என்பதை நிரூபித்துள்ளார். இந்த கவிதைக்கு லைக்குகள் காமெண்டுகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











