கன்னத்தோடு கன்னம் வைத்து நச்.. காதலனை உருகி உருகி காதலிக்கும் பிரியா பவானி சங்கர்!
சென்னை: நடிகை பிரியா பவானி சங்கர் காதலனுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோ பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரியா பவானி சங்கர் தனது காதலருடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் பிரியா பவானி சங்கர், விஜய் டிவியில் 'கல்யாணம் முதல் காதல் வரை' என்ற சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அந்த சீரியலில் இவரின் எளிமையான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அந்த சீரியலைத் தொடர்ந்து 'மேயாத மான்' படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். அந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, 'கடைக்குட்டி சிங்கம்', 'மான்ஸ்டர்' போன்ற படங்களில் நடித்து வந்த பிரியா பவானி சரங்கர், குறுகிய காலத்திலேயே தயாரிப்பாளர்களுக்கு பிடித்தமான நடிகையாக மாறிய இவர், யானை, குருதி ஆட்டம், பத்துதல, பத்து தல, திருச்சிற்றம் பலம், இந்தியன் 2 என அடுத்தடுத்து படத்தில் முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.

நடிகை பிரியா பவானி சங்கர்: கடந்த ஆண்டு அருள்நிதியுடன் இணைந்து இயக்குனர் அஜய் ஞானமுத்து 'டிமான்டி காலனி 2' படத்தில் நடித்திருந்தார். அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'டிமான்டி காலனி 3' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டது. மிரட்டலாக வெளியாகி இருக்கும் இந்த போஸ்டரால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அப்படம் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பிரியா பவானி சங்கர் மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
காதலனுக்கு நச் முத்தம்: இந்நிலையில், பிரியாபவானி சங்கர் தனது காதலருடன் கன்னத்தோடு கன்னம் வைத்து இருக்கும் போட்டோவை அவரின் காதர் ராஜவேல் ஷேர் செய்து பிறந்த நாள்வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த போட்டோவிற்கு கேப்ஷனாக, எனக்கு தெரிந்தவரை மிகவும் வேடிக்கையானவள் நீ தான். உன் கதைகளைக் கேட்டுச் சிரித்துக்கொண்டே உறங்குவதற்கும், அந்த அமைதியான முகத்தைப் பார்த்து விழிக்கும் நான் அதிர்ஷ்டசாலி. இத்தனை வருடங்கள் கடந்தும், நீ எல்லாவற்றையும் எளிதாகவும் சுவாரஸ்யமாகவும் வைத்திருக்கிறாய். என உருகி உருகி காதல் வசனம் பேசி உள்ளார். அந்த பதிவு இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில் பலரும் இந்த காதல் ஜோடியை வாழ்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











