'ஹும்... கொடுத்து வெச்ச குரங்கு'... ஒரெயொரு போட்டோ போட்டு நெட்டிசன்களை ஏங்க வைத்த நடிகை!
குரங்குகள் தனக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படங்களை நடிகை பிரியா பவானிசங்கர் வெளியிட்டுள்ளார்.
Recommended Video

சென்னை: குரங்குகள் தனக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களை வெறுப்பேற்றியுள்ளார் நடிகை பிரியா பவானிசங்கர்.
தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான பிரியா பவானிசங்கர், கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து பிரபலமானார். பின்னர் மேயாத மான் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். கார்த்தி நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான கடைக்குட்டி சிங்கம் படத்திலும், பிரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவர் தற்போது நிறைய படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். படப்பிடிப்பு தளங்கள் மற்றும் வெளியூர் செல்லும் போது எடுக்கும் புகைப்படங்களை, தனது பேஸ்புக் பக்கத்தில் அவ்வப்போது பிரியா வெளியிடுவார்.

குரங்குகள் முத்தம்
அந்த வகையில் அவர் வெளியிட்ட ஒரு புகைப்படம், ரசிகர்களை வெறுப்பேற்றும் வகையில் அமைந்துள்ளது. அதாவது அந்த புகைப்படத்தில், இரண்டு சிம்பான்சி குரங்குகள் பிரியாவின் கன்னத்தில் முத்தமிடுகின்றன. இதை பார்த்த நெட்டிசன்கள், ஏக்கப் பெருமூச்சு விடுகின்றனர்.

நெட்டிசன்கள் ஏக்கம்
'அப்படி எங்கிட்ட இல்லாதது அந்த குரங்குகளிடம் என்ன இருக்கிறது' என கேட்டு ஒரு ரசிகர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். மற்றொருவர் குரங்கு கையில் பூமாலை என கிண்டலடித்துள்ளார்.

செம கலாய்
'நான் அந்த குரங்கா இருந்திருக்கக் கூடாதா' என ஒருவர் ஆதங்கப்பட்டுள்ளார். 'பிரியா இது உங்க பாய் பிரெண்டா' என சில கலாய்த்துள்ளனர். சில முரட்டு சிங்கிள்ஸ், தங்களது ஏக்கத்தை எமோட்டிகன்களாக பதிவிட்டுள்ளனர்.
ஒய்யாரமாக போஸ்
பிரியாவின் இந்த புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது. முத்தம் கொடுப்பது மட்டுமின்றி இரு குரங்குகளும் பிரியாவின் தோள் மேல் கைப்போட்டு, ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளன. மற்றொரு புகைப்படத்தில், ஒரு குரங்கு பிரியாவின் தோள் மீது ஏறி நின்று போஸ் கொடுத்துள்ளது. ஹும் கொடுத்து வைத்த குரங்குகள்.


Click it and Unblock the Notifications











