Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சுரேஷ் கோபி ரீல் மகளின் கனவை நிறைவேற்றிய இயக்குனர் சுசீந்திரன்!
மலையாள நடிகை பிரியா லால் ஜீனியஸ் படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
சென்னை: இயக்குனர் சுசீந்திரன் தனது கனவை நிறைவேற்றிவிட்டதாக ஜீனியஸ் படத்தின் நாயகி பிரியா லால் தெரிவித்துள்ளார்.
மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு இறக்குமதியாகி இருக்கும் மற்றொரு நடிகை பிரியா லால். சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜீனியஸ்' படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
அக்டோபர் 26ம் தேதி இப்படம் வெளிவருகிறது. இப்படம் குறித்து பிரியா லால் கூறியதாவது,
6ம் தேதி அல்ல 2ம் தேதியே ரிலீஸாகும் சர்கார்?: இருக்கு மெகா காரணம் இருக்கு
தமிழில் முதல் படம்
"மலையாளத்தில் முதல் படம் 'ஜனகன்'. அப்படத்தில் சுரேஷ் கோபியின் மகளாக நடித்திருக்கிறேன். உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு த்ரில்லராக எடுக்கப்பட்ட படம். அதன் பிறகு ரொமாண்டிக், காமெடி படங்களில் நடித்திருக்கிறேன். தமிழில் ஜீனியஸ் தான் முதல் படம்.
வித்தியாசமான கதாபாத்திரம்
இயக்குநர் சுசீந்திரனின் படத்தை முன்பே பார்த்திருக்கிறேன். இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் வித்தியாசமானது. 'ஜீனியஸ்' படத்தின் கதை எனக்குத் தெரியாது. அது பற்றி ஒரு வரி தான் சுசீந்திரன் கூறினார். அப்போதே இந்த படத்தில் நடிக்க முடிவு செய்து விட்டேன்.
சுசீந்திரன் படங்கள் பிடிக்கும்
வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, ஜீவா, பாண்டியநாடு போன்ற படங்களைப் பார்த்திருக்கிறேன். இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் ஜாஸ்மின். ஒரு நர்ஸ் ஆக நடிக்கிறேன். இந்த கதாபாத்திரம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். ஒரு மாணவி போல சுசீந்திரன் என்ன சொல்கிறாரோ அதை நடித்துவிட்டு வருவேன்.
முதல் காட்சியே க்ளைமாக்ஸ்
இப்படத்தில் நான் நடித்த முதல் காட்சி க்ளைமாக்ஸ் தான். நீளமான காட்சி என்பதால் எனக்கு அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிக்க கொஞ்சம் நேரம் எடுத்தது. அதுமட்டுமில்லாமல் ஒரு சிறிய பாவனை கூட அந்த கதாபாத்திரத்தைக் கெடுத்துவிட கூடாது என்பதிலும் கவனமாக இருந்தேன். அதேபோல் சுசீந்திரனும் கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல் வாங்கிக் கொள்வார். இப்படிதான் நடிக்க வேண்டும் என்று நடித்தும் காட்டுவார். அவர் சொல்வதை நான் அப்படியே பின்பற்றுவேன்.
நெருக்கத்தை ஏற்படுத்தும்
மேலும், பல பேருக்கு இந்த படம் ஒரு நெருக்கத்தைக் கொடுக்கும். பள்ளி பருவத்தில் எல்லோருக்கும் படிக்க வேண்டும் என்ற நெருக்கடியும், நிர்பந்தமும் இருக்கும். முக்கியமாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஜீனியஸாக ஆக வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்களுக்கு இப்படம் மிகவும் நெருக்கமாக இருக்கும். அதேபோல் எனக்கும் அதிக நெருக்கம் இருந்தது.
நிறைவேறிய கனவு
நீண்ட நாட்களாக ஒரு கனவு, தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்று. பாட்டு, நடனம், நடிப்பு போன்றவற்றில் ஆர்வம் இருந்தது. ஆனால் என் குடும்பம் சினிமா பின்னணியில் இல்லாததால் அம்மாவிடம் சொல்ல தயங்கினேன். ஆனால் என் பெற்றோர் எனக்கு உறுதுணையாக இருந்தனர்.
இரண்டு ஜீனியஸ்
இந்த படத்தில் இரண்டு ஜீனியஸ் இருக்கிறார்கள். ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா, இன்னொருவர் சுசீந்திரன். இந்த இரண்டு ஜீனியஸ் இருக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம். யுவனின் மிகப் பெரிய விசிறி நான். எனக்கு மிகவும் பிடித்த பாடல் 'சிலுசிலு' பாடல் தான்.
பிகே படம் மாதிரி
முக்கியத்துவம் கொடுக்கும் எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க தயாராக இருக்கிறேன். பிகே படம் மாதிரி உளவியல் ரீதியான முக்கியத்துவம் இப்படத்திலும் இருக்கும். 'வெண்ணிலா கபடி குழு'வும், 'நான் மகான் அல்ல' படமும் எனக்கு மிகவும் பிடித்த படம்.
புதுவரவு
ரோஷனும் நானும் புது வரவு. இருப்பினும் அவர் எப்போதும் நேர்மறையான எண்ணம் கொண்டவர். அவரைச் சுற்றி நேர்மறையான அதிர்வு இருந்துகொண்டே இருக்கும். அவருக்கும் நடிப்பு என்பது மிகவும் பிடித்தமான விஷயம்.