Actress Priyamani: அட இப்படியெல்லாமா பண்றாங்க.. பாலிவுட் நடிகர்கள் குறித்து பிரியாமணி ஆச்சர்யம்!
சென்னை: நடிகை பிரியாமணி தமிழில் பருத்திவீரன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். கார்த்தியின் அறிமுக படத்திலேயே அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தியவர். தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் இவரது நடிப்பில் ஷாருக்கான், நயன்தாரா லீட் கேரக்டர்களில் நடித்திருந்த ஜவான் படம் வெளியாகி 1000 கோடி கிளப்பில் இணைந்தது. படத்தை இயக்குநர் அட்லீ இயக்கியிருந்தார். படம் ஏராளமான ரசிகர்களை குறிப்பாக வட இந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இன்றைய தினம் பிரியா மணி நடிப்பில் ஆர்ட்டிகிள் 370 படம் ரிலீசாகியுள்ளது.
பிரியா மணி தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் பாலிவுட் நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்து பிரியாமணி பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. இந்த வீடியோவில் ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டில் ட்ரெண்டிங்கில் உள்ள பாப்பராசி கலாச்சாரம் குறித்து பிரியா மணி பேசியுள்ளார். அவரது இந்த வீடியோ ரசிகர்களை யோசிக்க வைத்துள்ளது. இயல்பான ஒன்றாக ரசிகர்கள் நினைத்துவரும் இந்த விஷயத்தின் உண்மைத்தன்மையை தற்போது பிரியா மணி வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகை பிரியாமணி: நடிகை பிரியாமணி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அடுத்தடுத்த மொழிப் படங்களில் முக்கியமான கேரக்டர்களில் நடித்து வருகிறார். தமிழில் நடிகர் கார்த்தியின் அறிமுகப் படமான பருத்திவீரன் படத்தில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்த ப்ரியாமணி தேசிய விருதையும் பெற்றார். இந்த படத்தில் அவரது நடிப்பு இயல்பாக அமைந்திருந்தது. தொடர்ந்து தமிழில் சில படங்களில் நடித்த பிரியா மணி, அடுத்தடுத்த மொழிப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். பிரியாமணி நடிப்பில் சமீபத்தில் பாலிவுட்டில் ஜவான் படம் ரிலீசானது. நடிகர் ஷாருக்கான், நயன்தாரா உள்ளிட்டவர்கள் நடித்திருந்த இந்த படத்தில் பிரியாமணியின் கேரக்டரும் பேசப்பட்டது.
ஆர்ட்டிகள் 370 படம்: இன்றைய தினம் பிரியாமணி நடிப்பில் ஆர்டிகள் 370 படம் ரிலீசாகியுள்ளது. இந்த படத்தை ஒட்டி அடுத்தடுத்த பிரமோஷன்களில் பிரியாமணி ஈடுபட்டார். அப்போது பாலிவுட் நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்து அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. பாலிவுட்டில் பாப்பராசி புகைப்பட கலைஞர்களை வரவழைத்து ஏர்போர்ட், ஜிம் ஆகிய இடங்களில் போட்டோக்கள், வீடியோக்கள் ஆகியவற்றை பாலிவுட் நடிகர்கள் எடுப்பது குறித்த ரகசியத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். இந்த விஷயத்தில் பாலிவுட் நடிகர்கள் ஏஜென்சி மூலம் பணம் கொடுப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
பாப்பராசி கலாச்சாரம்: பாலிவுட் நடிகர்கள் தாங்கள் செல்லும் இடங்களை ஏஜென்சிகளிடம் முன்னதாகவே சொல்லிவிடுவார்கள் என்றும் அவர்கள் மூலம் புகைப்படக் கலைஞர்கள் அந்த நடிகர்கள் செல்லும் இடங்களில் சென்று வீடியோக்களை எடுப்பார்கள் என்றும் பிரியாமணி தெரிவித்துள்ளார். பின்னர் புகைப்பட கலைஞர்கள் அந்த நடிகர்களை எதேச்சையாக சென்று புகைப்படம் எடுத்தது போல பிம்பத்தை ஏற்படுத்தி விடுவார்கள் என்றும் சமூக வலைதளங்களில் பதிவிடுவார்கள் என்றும் பிரியாமணி தெரிவித்துள்ளார். இதற்கு அவர்கள் அதிகமான பணத்தை கொடுத்து வருவதாகவும் பிரியாமணி குறிப்பிட்டுள்ளார்.
பிரியா மணி ஆச்சர்யம்: தற்போது ஒரு டிரெண்டாகவே இது மாறி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விஷயம் கேள்விப்பட்டு தனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தன்னிடமும் கேட்கப்பட்டது என்றும் ஆனால் அப்படிப்பட்ட விளம்பரங்கள் தனக்கு தேவையில்லை என்று தான் கூறிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த ட்ரெண்ட், பாலிவுட், ஹாலிவுட்டை தொடர்ந்து, தற்போது தென்னிந்திய மொழி நடிகர்கள், நடிகைகளிடமும் உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்ஸ்டாகிராம், ரீல்ஸ், யூடியூப், ஷார்ட்ஸ் என இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
நடிகர்களின் விளம்பர ட்ரெண்ட்: ஹாலிவுட்டில் இந்த பாப்பராசி கலாச்சாரம் மிகவும் இயல்பான ஒன்றாக உள்ளது. இந்தியாவில் பாலிவுட்டில் தான் இந்த ட்ரெண்ட் அதிகமாக காணப்படுகிறது. மும்பை விமான நிலையத்துக்கு வரும் பிரபலங்களை பின்தொடரும் புகைப்படக்காரர்களை வைத்து இதை நாம் அறிந்து கொள்ளலாம். அந்த வகையில் தன்னை பின்தொடர்ந்து புகைப்பட கலைஞர்களிடம் போஸ் கொடுப்பதாகவும் அவர்களிடம் சண்டையிடுவதாகவும் நடிகர்கள் அடுத்தடுத்து தங்களை பிரபலப்படுத்தி வருகின்றனர். தமிழிலும் இந்த கலாச்சாரம் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களிடம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











