செல்பி புள்ள கிவ் மீ அ உம்மா..உம்மா...பிரியா வாரியரின் கவர்ச்சி போட்டோஸ்!
சென்னை: இந்திய சினிமாவையே கலக்கிய காந்த கண்ணழகி பிரியா பிரகாஷ் வாரியர். மலையாளத்தில் ரிலீசான ஒரு அடர் லவ் படத்தில் பள்ளி படிக்கும் மாணவியாக நடித்திருந்தார். பருவ காதலை தனது காதலனுக்கு கண்ணாலேயே புரிய வைத்த அந்த காதல் வைரஸ், அந்த ஒரே படத்திலேயே செம ஹிட்டாகி விட்டார். பல படங்களை கைவசம் வைத்துக்கொண்டு நடித்து வரும், அவர் தற்போது இன்ஸ்டாகிராமில் அசத்தலான போட்டோவை வெளியிட்டுள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூரில் பிறந்த நடிகை பிரியா பிரகாஷ் வாரியர், அங்கேயே பள்ளி கல்லூரி படிப்பை முடித்தார். இதைத்தொடர்ந்து, Thanaha மலையாளப்படத்தில் நடித்தார். இந்த படத்தை தொடர்ந்து, Oru Adaar Love படத்தில் நடித்து உலக அளவில் டிரெண்டானார். இதைத்தொடர்ந்து, 2018-ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபராக மாறிய ப்ரியா வாரியருக்கு தெலுங்கில் செக், இஷாக் ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு கன்னடம், இந்தி படங்களிலும் நடித்தார்.

ப்ரோ: சமுத்திரக்கனி இயக்கத்தில் தம்பி ராமையா நடித்த வினோதய சித்தம் தெலுங்கில் 'ப்ரோ' என்ற பெயரில் ரீமேக்கானது. இதில் சமுத்திரக்கனி நடித்த கதாபாத்திரத்தில் பவன் கல்யாணும், தம்பி ராமையா கதாபாத்திரத்தில் சாய் தேஜ் நடித்திருந்தனர். இந்த படத்தில் பிரியா வாரியர் நடித்தார். தமிழில் இந்த படம் வெற்றி பெற்றது போல, தெலுங்கிலும் இந்த படம் நல்ல வசூலை அள்ளியது.
கைவசம் உள்ள படம்: தற்போது, பிரியா வாரியர் தனுஷ் இயக்கியுள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் நடித்து வருகிறார். மேலும், அனிகா சுரேந்திரன், ப்ரியா வாரியர், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இளைஞர்களின் காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகி வரும், இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'golden sparrow' இணையத்தில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து, இந்தியில் இரண்டு படத்திலும், கன்னடத்தில் விஷ்ணு பிரியா என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
செல்பி புள்ள : அடிக்கடி வெளிநாட்டிற்கு வெக்கேஷன் சென்று புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்ட ப்ரியா வாரியர், தற்போது நீச்சல் குளத்தில் தண்ணீரில் மிதந்தபடி, சிவப்பு பட்டு ஆடையில், கையில் தாமரைப்பூவை வைத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோஸ் இணையத்தில் லைக்குகளை பெற்று டிரெண்டாகி வருகிறது. நடிகை பிரியா வாரியர். இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார். இன்ஸ்டாகிராமில் 7.5 மில்லியன் ஃபாலோவர்ஸ் இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











