Priya Varrier :மாலத்தீவில் கவர்ச்சி போட்டோஷுட்.. ரசிகர்களை பாடாய் படுத்திய பிரியா வாரியர்!

கொச்சி : மலையாளம், தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் நடிகை பிரியா வாரியர்.

கடந்த 2018ம் ஆண்டில் மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் படத்தின்மூலம் திரையுலகில் அறிமுகமானார் பிரியா பிரகாஷ் வாரியர்.

Actress Priya Varriors latest photoshoot in Maldives gets more likes

இந்தப் படம் அவருக்கு சிறப்பாக அமையவில்லை என்றபோதிலும், படத்தின் பிரமோஷனையொட்டி அவர் செய்த கண் சிமிட்டல், ரசிகர்களிடையே அவரை அதிகமாக பேமஸ் ஆக்கியது.

பிரியா வாரியரின் மாலத்தீவு போட்டோஷுட் : நடிகை பிரியா பிரகாஷ் வாரியர், மலையாளத்தில் கடந்த 2018ம் ஆண்டில் வெளியான ஒரு அடார் லவ் படத்தின்மூலம் திரையுலகில் என்ட்ரி கொடுத்தார். இந்தப் படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கவில்லை என்றபோதிலும், படத்தின் பிரமோஷனின்போதே அவர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். பிரமோஷனின்போது ஒரு கண் சிமிட்டலிலேயே இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை கட்டிப் போட்டார்.

ஒரு அடார் லவ் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனால் படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தான் நடிப்பில் மட்டுமில்லாமல் பின்னணி பாடுவதிலும் பெஸ்ட் என்பதையும் பிரியா நிரூபித்தார். 2019ம் ஆண்டிலேயே வெளியான ஃபைனல்ஸ் என்ற படத்தின் பாடலை பாடி, அசத்தினார். நீ மழவில்லு போலென் என்ற அந்தப் பாடலை நரேஷ் ஐயருடன் இணைந்து பாடினார் பிரியா வாரியர்.

தன்னை ஸ்ரீதேவியின் ரசிகை என்று கூறும் பிரியா வாரியர், ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் நடித்துள்ளார். ஸ்ரீதேவியின் வாழ்க்கையை மையமாக கொண்டு வெளியான இந்தப் படம் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து தெலுங்கு, கன்னட மொழிப் படங்களிலும் பிரியா வாரியர் நடித்துள்ளார். சமூக வலைதளங்களிலும் மிகவும் பிசியாக காணப்படும் பிரியா வாரியர், தொடர்ந்து பாரம்பரியம் மற்றும் நவீனம் கலந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது மாலத்தீவில் சுற்றுப்பயணத்தில் உள்ளார் பிரியா வாரியர். கலக்கல் மற்றும் கவர்ச்சி தூக்கலான உடையில் இவர் அடுத்தடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். பீச் மற்றும் பீச் மணலில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. மிகவும் குறைவான உடையில் இவர் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகமான லைக்ஸ்களை கொடுத்து வருகின்றனர்.

Actress Priya Varriors latest photoshoot in Maldives gets more likes

மாலத்தீவில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் பிரியா வாரியர், பிகினியிலும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவரது அடுத்தடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. தொடர்ந்து பட வாய்ப்புகளை ஈர்க்கும் வகையில், அடுத்தடுத்த கவர்ச்சிப் புகைப்படங்களையும் வீடியோக்களையும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

Actress Priya Varriors latest photoshoot in Maldives gets more likes

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X