9ஆம் வகுப்பு படிக்கும் போதே லவ் பண்ணேன்.. ஆனா பிரேக்கப் ஆயிடுச்சு.. ரகசியத்தை போட்டுடைத்த கண்ணழகி!
சென்னை: நடிகை பிரியா வாரியர் தனது காதல் அனுபவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
மலையாள சினிமாவில் வெளியான ஒரு அடார் லவ் என்ற திரைபடத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலமானார் ப்ரியா பிரகாஷ் வாரியர். இந்த படத்தில் இவர் தனது புருவத்தை தூக்கி சக மாணவனை பார்த்து கண்ணடித்ததை கண்டு ரசிக்காதவர்களே இருக்க முடியாது.
அந்தளவுக்கு பிரபலமானது அந்தக் காட்சி. ராகுல் காந்தி ஒரு முறை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடிக் குறித்து பேசிவிட்டு பின்னர் அவரை கட்டியணைத்து கண்ணடித்தார். அப்போது பிரியா வாரியருடன் ஒப்பிட்டு ட்ரோல்ஸ் செய்யப்பட்டார் ராகுல்.

ரசிகர் பட்டாளம்
ராகுலுடன் ஒப்பிடும் அளவுக்கு அந்தக்காட்சி பெரும் பிரபலம். அடார் லவ் படம் மலையாள தேசம் மட்டுமின்றி நாடு முழுக்கவும் அவருக்கு ரசிகர் பட்டாளத்தை தேடி தந்தது.

தண்ணி சிகரெட்
அந்தக் காட்சியால் எந்த அளவுக்கு பிரபலமானாரோ அந்தளவுக்கு சர்ச்சைகளுக்கும் ஆளானார். இந்நிலையில் சமீபத்தில் ப்ரியா வாரியார் நடித்திருந்த ஸ்ரீதேவியின் பங்களா படத்தின் டிரைலரில் மது குடிப்பது, சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்ததால் அதுவும் சர்ச்சையானது.

பள்ளிக்கூட காதல்
சமூகவலைத்தளங்களில் பிசியாக இருக்கும் ப்ரியா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார். இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த பிரியா வாரியார் தனது காதல் குறித்து மனம் திறந்திருக்கிறார்.

இருவரும் காதலித்து..
அந்த பேட்டியில் தான் 9 ஆம் வகுப்பு படித்தபோது ஒரு பையன் தன்னிடம் காதலை சொன்னதாக கூறியிருக்கிறார். தானும் அந்தக் காதலை ஏற்றுக்கொண்டு ஒருவரையொருவர் காதலித்ததாகவும் கூறினார்.

பிரிந்துவிட்டோம்
பின்னர் நாளடைவில் அது ஒரு இன ஈர்ப்பு என்பதை இருவரும் புரிந்து கொண்டதாகவும் இதனால் இருவரும் பேசி பிரிந்து விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார் பிரியா வாரியர். 9ஆம் வகுப்பு படிக்கும் போதே தான் காதல் வயப்பட்டதை பளிச்சென கூறியுள்ளார் பிரியா வாரியர்.


Click it and Unblock the Notifications











