Priya varrier: அட இதுதான் ஜல்சா ஜலகிரீடையா.. இளசுகளை தவிக்க விட்ட பிரியா வாரியர்!

சென்னை: நடிகை பிரியா வாரியர் இன்ஸ்டாவில் ஹாட்டான போட்டோவை வெளியிட்டு இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

இந்திய சினிமாவையே கலக்கிய காந்த கண்ணழகி பிரியா பிரகாஷ் வாரியர். மலையாளத்தில் ரிலீசான ஒரு அடர் லவ் படத்தில் பள்ளி படிக்கும் மாணவியாக நடித்திருந்தார்.

பருவ காதலை தனது காதலனுக்கு கண்ணாலேயே புரிய வைத்த அந்த காதல் வைரஸ், அந்த ஒரே படத்திலேயே வைரல் நாயகியாக மாறிவிட்டார்.

actress priya varrier underwater photos trending on social media

ஏராளமான ரசிகர்கள்: நடிகை ப்ரியா வாரியர் 2018 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபராக மாறினார். தெலுங்கில் செக், இஷாக் ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு கன்னடம், இந்தி பட வாய்ப்புக்கள் கிடைத்தது. இந்தியில் அவர் நடித்துள்ள ஸ்ரீதேவி பங்களா திரைப்படம் ஏதோ சில காரணத்தால் வெளியாகாமல் உள்ளது.

ப்ரோ படத்தில்: அண்மையில், சமுத்திரக்கனி இயக்கத்தில் தம்பி ராமையா நடித்த வினோதய சித்தம் தெலுங்கில் 'ப்ரோ' என்ற பெயரில் வெளியானது. இதில் சமுத்திரக்கனி நடித்த கதாபாத்திரத்தில் பவன் கல்யாணும், தம்பி ராமையா கதாபாத்திரத்தில் சாய் தேஜ் நடிக்கின்றனர். இப்படம் திரையரங்கில் வெளியாகி சக்கைப்போடு போட்டது.

actress priya varrier underwater photos trending on social media

கைவசம் உள்ள படங்கள்: தற்போது பிரியா வாரியர், யாரியான் 2, லவ் ஹேக்கர்ஸ் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. நடிகை மட்டுமில்லாமல் பாடகியாக இருக்கும் பிரியா வாரியர், சில திரைப்படங்களில் பாடல்களையும் பாடியுள்ளார்.

உச்சுகொட்டும் பேன்ஸ்: இன்ஸ்டாகிராமில் 7.6 மில்லியன் பாலோவர்களை வைத்து இருக்கும் நடிகை பிரியா வாரியர், கேரள பாரம்பரிய உடையில் தண்ணீருக்குள் மூழ்கி இருக்கும் போட்டோவை பதிவிட்டுள்ளார். இந்த புடவைக்கு ஏற்றபடி வட்டவடிவத்தில் பொட்டு, காஜல், மை மற்றும் மஸ்காரா போட்டிருக்கிறார். உதட்டிற்கு நியூட் கலர் லிப் ஸ்டிக்கை போட்டுள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலர் என் ராத்தூக்கம் போச்சு என புலம்பி வருகின்றனர். இன்னும் சில ரசிகர்கள் அட இதுதான் ஜல்சா ஜலகிரீடையா என கருத்துக்களை பகிர்ந்து இன்ஸ்டாபக்கத்தை கமெண்டுகளால் நிரப்பி வருகின்றனர்.

actress priya varrier underwater photos trending on social media

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X