முத்தழகுக்கு இன்று பிறந்த நாள்..ரசிகர்கள்.. திரைப்பிரபலங்கள் வாழ்த்து!
பெங்களூரு : நடிகை பிரியாமணி இன்று தனது 36வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும், நண்பர்களும் மற்றும் திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video
தமிழ் திரைப்படங்களில் பல ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வரும் நடிகை பிரியாமணி தனது சிறப்பான நடிப்பால் பெரும்பாலான மக்களின் நெஞ்சில் என்றும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் அடுத்தடுத்து நடித்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தை தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமாவிலும் அவர் பெற்றுள்ளார்

பாலுமகேந்திரா
தமிழுக்கு வருவதற்கு முன்னால் தெலுங்கு, மலையாளம் என தனது அறிமுகத்தை ஏற்கனவே பல மொழிகளில் கொடுத்திருந்தாலும், 2007 ஆம் ஆண்டு தமிழில் பருத்திவீரன் என்ற படத்தில் அவருக்கு கிடைத்த பெயரைப் போன்றது மாதிரி பிறகு வேறு எந்த ஒரு படமும் அவருக்கு கொடுக்கவில்லை. இவர் தனது அறிமுகத்தை கண்களால் கைது செய் மற்றும் இயக்குனர் பாலுமகேந்திரா இயக்கிய அது ஒரு கனாகாலம் போன்ற படங்களின் மூலம் தனது அறிமுகத்தை தமிழில் எடுத்து வைத்தார்.

தேசிய விருது
பருத்திவீரன் அவரது வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. நடிகர் கார்த்தி முதன்முதலாக அறிமுகமான இந்த படத்தை இயக்குனர் அமீர் இயக்கியிருந்தார். பாக்ஸ் ஆபீசில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது இந்த படம். இந்த படத்தில் வரும் பருத்திவீரன் மற்றும் முத்தழகு என இரு கதாபாத்திரங்களில் இவர்கள் இருவரும் நடிப்பில் வெளுத்து கட்டியிருப்பார்கள்.

சர்ச்சைக்குரிய கிளைமாக்ஸ்
மேலும் இப்படத்தில் இருவரின் நடிப்பையும் பலரும் பாராட்டினர் குறிப்பாக இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பல சர்ச்சைகளை ஏற்படுத்தி பின் ஒரு சில சிறிய மாற்றங்களுடன் வெளியானது இவ்வாறு இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மிகப்பெரிய பலமாக அமைந்தது. பாராட்டுக்கள் ஒருபுறமிருக்க இந்திய அரசு இந்த படத்திற்காக தேசிய விருதை அறிவித்திருந்தது அதில் பிரியாமணிக்கு சிறந்த நடிகை என விருது வழங்கப்பட்டது. இன்றும் முத்தழகாக இவர் பலரது மனங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்

சிறப்பான நடிப்பு
பொதுவாக ஹீரோக்கள் மட்டுமே இரட்டை வேடங்கள் மட்டும் மூன்று வேடங்கள் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்த வேளையில் பிரியாமணி இரட்டை வேடத்தில் சாருலதா என்ற படத்தில் முற்றிலும் வித்தியாசம் கதாபாத்திரத்தில் இரட்டையர்களாக நடித்து இருப்பார். இவரின் இந்த புது முயற்சிக்காக இந்தப் படம் நல்ல பாராட்டுக்களுடன் சில விருதுகளையும் வென்றது.

முதல் பார்வை போஸ்டர்
இந்நிலையில் இவர் இப்போது நடித்து கொண்டு வரும் "விராட பர்வம்" படக்குழு இவரது பிறந்தநாளையொட்டி பிறந்தநாள் பரிசாக பிரியாமணியின் முதல் போஸ்டர் லுக் ஒன்றை வெளியிட்டது. இந்த படத்தில் ராணா டகுபதி, சாய்பல்லவி போன்றோருடன் இணைந்து பிரியாமணி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் . இந்த போஸ்டரில் அவர் கருப்பு நிற உடையுடன் பின்னால் துப்பாக்கி ஒன்றை வைத்துக்கொண்டு பூக்களை தொட்டவாறு முகத்தில் புன்னகையுடன் போஸ் கொடுத்திருப்பார் இந்த போஸ்டர் சற்று முன் வெளியான நிலையில் இப்போது இது வைரலாகி வருகிறது. இவ்வாறு பல வாழ்த்துக்களையும், பல ஆச்சரியங்களையும், ஆசீர்வாதங்களையும் தனது பிறந்தநாளான இன்று பெற்று வரும் பிரியாமணிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை நமது சார்பாகவும் தெரிவித்துக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications











