அடுத்த அப்டேட்டுக்கு தயாராகுங்கள் ... சஸ்பென்ஸ் வைத்த பிரியாமணி!
ஹைதராபாத் : பருத்திவீரன் படத்தின் மூலம் தேசிய விருதை வென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை பிரியாமணி.
தமிழைத் தவிர கன்னடம் தெலுங்கு இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் இவருக்கு திருமணத்திற்கு பிறகும் எக்கச்சக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
ராவணன் படத்திற்கு பிறகு தமிழில் படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் நடித்து வரும் இவர் இப்பொழுது ஹாட்டான சிங்கிள் பீஸ் டிரஸ்ஸில் அடுத்த அப்டேட்டுக்கு தயாராக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சஸ்பென்ஸை கூட்டியுள்ளார்.

அடையாளமாக மாறியுள்ளது
இந்தியாவில் அனைவராலும் கவனிக்கப்படும் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை பிரியா மணி. தமிழில் அறிமுகமான ஆரம்பத்தில் சில திரைப்படங்கள் தோல்விகளை கொடுக்க , கார்த்தி கதாநாயகனாக அறிமுகமான பருத்திவீரன் இவருக்கு தேசிய விருதை வென்று கொடுத்தது.அன்று முதல் இவர் நடித்திருந்த முத்தழகு கதாபாத்திரம் இவரின் அடையாளமாக மாறியுள்ளது.

நேரடி தமிழ் படத்தில்
தமிழைத் தொடர்ந்து இந்தி மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் பிரியாமணிக்கு தமிழை விடவும் மற்ற மொழிகளில் வாய்ப்புகள் குவிந்து வருவதால் தமிழில் மிகக் குறைந்த அளவில் மட்டுமே படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக மணிரத்னம் இயக்கத்தில் ராவணன் படத்தில் நடித்திருந்த பிரியாமணி அதன் பிறகு நேரடி தமிழ் படத்தில் எதுவும் ஒப்பந்தம் ஆகவில்லை.

போட்டோஷூட்டுடன் சஸ்பென்ஸ்
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற அசுரன் திரைப்படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் வெங்கடேஷ் நடிப்பில் உருவாகி வருகிறது. அதில் மஞ்சுவாரியர் நடித்த கதாபாத்திரத்தில் நடிகை பிரியாமணி நடித்து வருகிறார். மேலும் விராட்ட பருவம், மைதான், கொட்டேஷன் கேங், உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் இவர் போட்டோஷூட்டுடன் சஸ்பென்ஸ் வைத்து கலக்கி வருகிறார்.

சிங்கிள் பீஸ்ஸில்
திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் நடித்து வரும் பிரியாமணிக்கு வாய்ப்புகள் தொடர்ந்து வர இப்பொழுது சிங்கிள் பீஸ்ஸில் பளிச்சென தொடை அழகு தெரியும் அளவிற்கு ஸ்டன்னிங்கான லுக்கில் போட்டோ ஷூட்டில் இறங்கியிருக்கும் பிரியாமணி ஸ்டூடியோவில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டு கம்மிங் சூன் என அடுத்த அப்டேட்டுக்கு தயாராகுங்கள் என்ற சஸ்பென்ஸோடு வெளியிட்டுள்ள போட்டோ எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. மேலும் இவர் ஹிந்தியில் சர்ச்சையில் சிக்கி விரைவில் வெளியாக உள்ள தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











