நான் கருப்பாக இருப்பதாக விமர்சிக்கிறார்கள்.. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. பிரபல நடிகை குமுறல்!

சென்னை: தான் கருப்பாக இருப்பதாக விமர்சிப்பது மனதுக்கு கஷ்டமாக இருப்பதாக பிரபல நடிகை வேதனைப்பட்டுள்ளார்.

Recommended Video

சந்தோஷமா இருக்கு! Samantha FAMILY MAN 2 சர்ச்சைக்கு முதல் முறையாக பதிலளித்துள்ளார்

நடிகை பிரியாமணி தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். 2004ஆம் ஆண்டு வெளியான கண்களால் கைது செய் படத்தின் மூலம் தமிழிலும் தடம் பதித்தார்.

தொடர்ந்து மலையாளம், கன்னடம், இந்தி மொழி படங்களிலும் அறிமுகமானார் பிரியாமணி. இதனால் பிஸியான நடிகையானார்.

முத்தழகாக..

முத்தழகாக..

கடந்த 2007ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் படத்தில் நடித்தார் நடிகை பிரியாமணி. இதில் முத்தழகு கதாப்பாத்திரத்தில் கிராமத்து பெண்ணாக பட்டையை கிளப்பிய பிரியா மணிக்கு தேசிய விருது கிடைத்தது.

திருமணம்..

திருமணம்..

தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய மொழி சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த பிரியாமணி கடந்த 2017ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார் பிரியாமணி.

பல படங்கள் கைவசம்

பல படங்கள் கைவசம்

கடைசியாக அவரது நடிப்பில் அட்டீட் என்ற இந்திப் படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது. தற்போது தெலுங்கு மொழியில் 4 படங்கள் கன்னட மொழியில் 3 படங்கள், தமிழ் மற்றும் இந்தியில் தலா ஒரு படம் என செம பிஸியாக உள்ளார்.

போட்டிகள் நிறைந்தது

போட்டிகள் நிறைந்தது

இந்நிலையில் நடிகை பிரியா மணி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் தனது மனக்குமுறல்களை கொட்டித் தீர்த்துள்ளார் பிரியா மணி. அவர் பேசியிருப்பதாகவது, சினிமா இன்டஸ்ட்ரி போட்டிகள் நிறைந்தது. நான் சினிமாவுக்கு வந்த புதிதில் கடினமாக உழைத்தேன்.

நேர்மையாக உழைத்தால்

நேர்மையாக உழைத்தால்

ஆரம்பத்தில் அந்தளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகதான் முன்னேறினேன். நேர்மையாக உழைத்தால் என்றாவது வெற்றி வரும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்துக் கொண்டே இருந்தேன்.

குண்டாக இருக்கிறேன்

குண்டாக இருக்கிறேன்

என் கணவர் எனக்கு ஆதரவாக இருப்பதால் திருமணத்திற்கு பிறகு நடிப்பது எனக்கு பிரச்சனையாக இல்லை. சிலர் எனக்கு வயதாகி விட்டது என்று கூறுகிறார்கள். நான் குண்டாக இருக்கிறேன் என்றும் சொல்கிறார்கள்.

தரக்குறைவாக பேசாதீர்கள்

தரக்குறைவாக பேசாதீர்கள்

கருப்பாக இருக்கிறேன் என்றும் விமர்சிக்கிறார்கள். இவற்றையெல்லாம் கேட்கும் போது மனசுக்கு ரொம்பவே கஷ்டமாக உள்ளது. யாரையும் தரக்குறைவாக பேசாதீர்கள். கருப்பாக இருப்பவர்களும் அழகுதான். திறமை இருப்பவர்கள் வெற்றி பெறுவார்கள் என உருக்கமாக பேசியுள்ளார் நடிகை பிரியா மணி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X