பிரியாமணியுடன் ‘ஆடலாம் பாய்ஸ் சின்னதா ஒரு டான்ஸ்’... அப்ப 3 ப்ரண்ட்ஸை டேக் பண்ணுங்க!
பிரியாமணியுடன் ‘ஆடலாம் பாய்ஸ் சின்னதா ஒரு டான்ஸ்’... அப்ப 3 ப்ரண்ட்ஸை டேக் பண்ணுங்க!
சென்னை: தன்னுடன் நடனமாட விரும்புவோர், தங்களுடைய மூன்று நண்பர்களை டேக் செய்ய வேண்டும் என நடிகை பிரியாமணி தெரிவித்துள்ளார்.
திருமணத்திற்குப் பின்பு ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர் படத்தில் நடித்து வருகிறார் நடிகை பிரியாமணி. தொடர்ந்து புதிய படங்களிலும் அவர் ஒப்பந்தமாகி வருகிறார்.

இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'எனது அடுத்த படத்தில் என்னுடன் சேர்ந்து நடனமாட உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. உங்களுடன் நண்பர்கள் மூவரையும் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம்' என அவர் தெரிவித்துள்ளார்.
பிரியாமணியின் இந்தப் பதிவைப் பார்த்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நடனத்தில் ஆர்வம் உள்ள பலர், தங்களுடைய நண்பர்கள் பெயருடன் சேர்த்து டேக் செய்து பதிவு வெளியிட்டு வருகின்றனர்.
பிரியாமணி குறிப்பிட்டுள்ள அந்தப் புதிய படம் யாருடைய இயக்கம் என்பது குறித்து தெரியவில்லை. ஒருவேளை அது ராஜமௌலி படமாகக் கூட இருக்கலாம் என்பதால், எப்படியும் அந்த படத்தில் ஒரு காட்சியில் தோன்றிவிட வேண்டும் என ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications











