முன்னழகை திறந்து காட்டி அப்படி ஒரு போஸ்.. என்ன பிரியாமணி இதெல்லாம்!

சென்னை : அருண் விஜய்யின் பாக்சர் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் விவேக் இயக்கத்தில் அடுத்து உருவாகிவரும் கொட்டேஷன் கேங் திரைப்படத்தில் ஸ்மக்லர் கில்லராக பிரியாமணி நடித்து வருகிறார்.

சாருலதா படத்திற்கு பிறகு தமிழில் எந்த ஒரு திரைப்படங்களிலும் ஒப்பந்தம் ஆகாமல் இருந்த பிரியாமணி ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வந்து கலை கட்டினார்.

இந்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகிவரும் தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் பாகம் இரண்டில் நடித்து வரும் பிரியாமணி அதன் பிரமோஷனுக்காக எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் இப்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

முத்தழகு

முத்தழகு

தொடர் வெற்றி திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்த வெகு சில நடிகைகளில் மிக முக்கியமானவராக இருந்த பிரியாமணி பருத்தி வீரன் திரைப்படத்தில் ஈடு இணையற்ற நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தேசிய விருது வென்றார். பருத்தி வீரன் திரைப்படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் கடந்த பின்னும் இன்றளவும் அனைவரும் இவரை முத்தழகு என் று அழைக்கும் அளவிற்கு முத்தழகு கதாபாத்திரம் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சாருலதா

சாருலதா

தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் எக்கச்சக்கமான வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ள பிரியாமணி தமிழிலும் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்த்துக் கொண்டு நிலையில் கடைசியாக 2012ஆம் ஆண்டு தமிழ் மற்றும் கன்னடம் என இரு மொழியிலும் ஒருசேர வெளியான சாருலதா திரைப்படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றதோடு அதன்பிறகு தமிழில் எந்த ஒரு திரைப்படங்களிலும் தோன்றவில்லை.

ஸ்மக்லிங்க் பற்றிய

ஸ்மக்லிங்க் பற்றிய

அருண் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் பாக்ஸர் திரைப்படத்தை இயக்கியுள்ள இயக்குனர் விவேக் அடுத்த இயக்கி வரும் கொட்டேஷன் கேங் திரைப்படத்தில் பிரியாமணி லீட் ரோலில் நடித்து வர கேரளாவில் நடக்கும் ஸ்மக்லிங்க் பற்றிய கதையாக உருவாகி வருகிறது. மேலும் இதில் தெய்வ திருமகள் மற்றும் சைவம் திரைப்படப் புகழ் சாரா அர்ஜுன் நடிக்கிறார்.

மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில்

மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில்

தனுஷ் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியாகி வசூலை வாரி குவித்து பல விருதுகளையும் வென்று உலக அளவில் தமிழ் சினிமாவை தலை நிமிர செய்திருக்கும் அசுரன் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வர அதில் நடிகர் வெங்கடேஷ் ஹீரோவாக நடித்து வருகிறார், மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் தெலுங்கில் பிரியாமணி நடிக்கிறார்.

ஸ்டன்னிங்கான லுக்கில்

ஸ்டன்னிங்கான லுக்கில்

இந்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் பாகம் இரண்டில் ஏற்கனவே சமந்தா நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில், பிரியாமணியும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். விரைவில் ரிலீசாக உள்ள இந்த வெப்சீரிஸ் ப்ரமோஷனுக்காக எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ள பிரியாமணி அதில் வித்தியாசமான பிளேசர் காஸ்டியூமில் ஸ்டன்னிங்கான லுக்கில் கச்சிதமாக இருக்கும் முன்னழகை திறந்து காட்டியவாறு மனதை அள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் சூடாக்கி வைரலாக்கி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X