என்னடா..அது மட்டும் வேற கலரா இருக்கு..பிரியங்கா சோப்ராவை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ் !

மும்பை : பாலிவுட் உலகில் உச்ச நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் பிரியங்கா சோப்ரா இப்பொழுது ஆங்கிலத் திரைப் படங்களிலும் வெப் சீரிஸிலும் நடித்து கலக்கி வருகிறார்.

அசாத்தியமான நடிப்பின் மூலம் ஹிந்தி திரையுலகில் தனக்கென நிரந்தரமான இடத்தைப் பிடித்து வெற்றி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரியங்கா சிறந்த நடிகைக்காக பல்வேறு விருதுகளை வென்று அதிக சம்பளம் பெரும் இந்திய நடிகைகளில் முன்னணியில் உள்ளார்.

இவர் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து வைரல் ஆகி வரும் நிலையில் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த பலரும் கால் நிறத்தைப் பார்த்து கலாய்த்த வருவதோடு வைரலாக்கியும் வருகின்றனர்.

மாடல் அழகியாக

மாடல் அழகியாக

ஹிந்தியில் கொடிகட்டிப் பறந்து வரும் பல ஹீரோயின்கள் முதன் முதலில் தமிழில் தனது அறிமுகத்தை கொடுத்துள்ளார் என்பது பலரும் அறிந்ததே. இந்த லிஸ்டில் பிரியங்கா சோப்ராவும் இருக்க விஜய் நடித்த தமிழன் திரைப்படத்தின் மூலம் மாடல் அழகியாக வலம் வந்த பிரியங்கா முதன்முறையாக கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

ஆங்கிலத் திரைப்படங்களிலும்

ஆங்கிலத் திரைப்படங்களிலும்

தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளுக்கு சொந்தக்காரரான பிரியங்கா சோப்ரா உலக அளவில் பிரபலமான 100 நபர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார். இந்திய திரைப்படங்களில் மட்டுமல்லாமல் ஆங்கிலத் திரைப் படங்களிலும் நடித்து அசத்தி வரும் பிரியங்கா சோப்ரா இன்றும் உலகளவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஹிந்தியில்

ஹிந்தியில் "தி ஹீரோ"

தமிழில் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட பிரியங்கா சோப்ரா ஹிந்தியில் "தி ஹீரோ" என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.

சாதனை புரிந்தது

சாதனை புரிந்தது

கதைக்கு ஏற்றாற்போல் கவர்ச்சியும், பாத்திரத்திற்கு ஏற்றார்போல் எந்த விதமான சவாலான வேடங்களையும் ஏற்று நடித்து பாராட்டுகளை பெற்று வந்த பிரியங்கா சோப்ரா நடித்த அந்தஸ், பர்பி, கிரிஷ் 3, டான் 2, அக்னீபாத் உள்ளிட்ட பல திரைப்படங்கள திரையில் சாக்கை போடு போட்டு பல நாட்கள் ஓடி சாதனை புரிந்தது.

கால்கள் மட்டும் கருப்பாக

கால்கள் மட்டும் கருப்பாக

இவ்வாறு இந்திய மக்களாலும் உலக மக்கள் பலராலும் நேசிக்கப்பட்டு பிரபலமான நடிகையாக இருந்து வரும் பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுக்கை அறையில் உட்கார்ந்து கொண்டு வெளியிட்டுள்ள புகைப்படத்தில் முகம் பளிச்சென இருக்க கால்கள் மட்டும் கருப்பாக இருப்பதை கவனித்த நெட்டிசன்ஸ் உங்கள் கால்கள் மட்டும் கருப்பாக உள்ளது எனவும் ஒரு வேள இதுதான் உங்களுடைய ஒரிஜினல் கலரா இத்தன நாள் மேக்கப் போட்டு தான் ஏமாத்திட்டு இருக்கீங்களா எனவும் கேள்விகளால் துளைத்தெடுத்து பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X