‘SSMB 29‘ படத்திற்காக பிரியங்கா சோப்ரா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஆத்தாடி தலையே சுத்துதே!

சென்னை: உலக அழகியும், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை பெரிய அளவில் அறிமுகம் தேவையில்லை. வட இந்தியாவில் பிறந்து வளர்ந்த பிரியங்கா சோப்ரா, தனது திறமையால் பாலிவுட்டில் வெற்றி பெற்றார். அதன் பிறகு ஹாலிவுட்டிலும் வாய்ப்புகளைப் பெற்று, பல வெற்றித்திரைப் படங்களில் நடித்துள்ளார். இந்திய திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் பிரியங்கா சோப்ரா, SMB 29 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடித்ததற்காவ அவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை தனது தடத்தை பதித்து இருக்கும் பிரியங்கா சோப்ராவின் திரைப்பயணம் தென்னிந்தியாவில் தான் தொடங்கியது. தளபதி விஜய்க்கு ஜோடியாக அவர் நடித்த "தமிழன்" திரைப்படம் 2002 ஆம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு, இந்தியில் ஹீரோ, அந்தாஸ் போன்ற படங்களில் அறிமுகமானார். 2003 முதல் தற்போது வரை தொடர்ந்து பல படங்களில் நடித்து பிரியங்கா வருகிறார். இதுவரை 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், 2016 ஆம் ஆண்டு முதல் ஹாலிவுட் திரைப்படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

SS Rajamouli SSMB29 Priyanka Chopra SSMB29
Photo Credit:

பிரியங்கா சோப்ரா: தற்போது பிரியங்கா சோப்ரா ஹாலிவுட்டில் திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் என 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அவர் நடித்த "சிட்டாடெல்" தொடர் மற்றும் "ஹெட்ஸ் ஆஃப் ஸ்டேட்" திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றன. தற்போது "தி ப்ளஃப்", "ஜட்ஜ்மென்ட் டே" ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், இந்தியாவில் இரண்டு பெரிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். மகேஷ் பாபுவின் SSMB 29 திரைப்படம் மற்றும் ஹ்ரித்திக் ரோஷன் நடிக்கும் "கிரிஷ் 4" திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அதிக சம்பளம்: இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் பிரியங்கா சோப்ராவும் ஒருவர். அவர் ஹாலிவுட் படங்களில் நடிப்பதற்கு சுமார் 40 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும், இந்திய திரைப்படங்களுக்கு 30 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் ராஜமௌலி இயக்கி வரும் SSMB 29 படத்திற்கு பிரியங்கா சோப்ரா ரூ 30 கோடியை சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகை என்ற சாதனையை பிரியங்கா சோப்ரா படைத்துள்ளார்.

மகேஷ் பாபு: இப்படத்திற்கு தற்காலிகமாக SSMB 29 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் மகேஸ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை ஸ்ரீ துர்கா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்தப் படத்தில் நடிக்க மகேஷ் பாபு சம்பளமாக எதுவும் பேசவில்லை என கூறப்படுகின்றது. அதாவது, படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதாகவும், இந்த இரண்டு பாகங்களிலும் நடிக்க, மகேஷ் பாபு சம்பளம் கேட்கவில்லை என்றும் கூறப்படுகின்றது. இது இல்லாமல், படத்தின் வருவாயில் 20 சதவீதத்தை சம்பளத்திற்கு பதிலாக பெற்றுக் கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அதே போல, எஸ்.எஸ். ராஜமௌலி தனது கடைசி படமான ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்க ரூபாய் 200 கோடியை சம்பளமாக பெற்றநிலையில், இந்தப் படத்திற்கு வருவாயில் 20 சதவீதத்தை ஒப்பந்தம் போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X