உடற்பயிற்சி செய்யும் கணவர் மீது ஏறி அமர்ந்து.. நடிகை பிரியங்கா சோப்ரா செய்த சேட்டையை பாருங்க!
சென்னை: உடற்பயிற்சி செய்யும் கணவரின் முதுகில் ஏறி அமர்ந்து நடிகை பிரியங்கா சோப்ரா செய்த சேட்டை வைரலாகி வருகிறது.
நடிகை பிரியங்கா சோப்ரா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் ஆவார்.
அவ்வப்போது தனது ஹாட் போட்டோக்களை ஷேர் செய்து இளைஞர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைப்பார்.

சோஷியல் மீடியா
குறிப்பாக விருது விழாக்களில் பங்கேற்கும் நடிகை பிரியங்கா சோப்ரா தனது முன்னழகை காட்டி கிறங்கடித்து வருகிறார். உள்ளாடை அணியாமலும் முன்னழகை மூடாமலும் அவர் கொடுக்கும் போஸ் சோஷியல் மீடியாக்களில் வைரலாகும்.

திருமணம்
பிரியங்கா சோப்ரா பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். கடந்த 2018ஆம் ஆண்டு தனது காதலரான நிக் ஜோனஸை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார் பிரியங்கா சோப்ரா. இருவரும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

புதிய போட்டோ
அடிக்கடி இவர்கள் இருவரும் சேர்ந்து இருப்பது போன்ற வீடியோக்களும் போட்டோக்களும் வைரலாவது வழக்கம். அந்த வகையில் இன்று நடிகை பிரியங்கா சோப்ரா தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

என்னுடைய ஃபேவரைட்
அதில் தனது கணவரான நிக் ஜோனஸ் புஷ்அப் செய்ய அவர் மீது ஏறி முதுகில் ஜம்மென்று அமர்ந்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா. மேலும் அந்த போட்டோவுக்கு புஷ்அப்ஸ் என்னுடைய ஃபேவரைட் எக்ஸ்ஸைர்ஸ் என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார்.

உங்களுக்கா? கணவருக்கா?
அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் உங்களின் ஃபேவரைட் என்றால் நீங்கள் புஷ் அப் செய்ய வேண்டும் இப்படி செய்பவரின் மீது ஏறி அமர்ந்திருக்க கூடாது என கமெண்ட் பதிவிட்டுள்ளனர். சிலர் புஷ் அப் உங்களுடைய ஃபேவரைட்டா அல்லது உங்கள் கணவரின் ஃபேவரைட்டா என கேட்டுள்ளனர்.

ரொம்பவே க்யூட்
பிரியங்கா சோப்ராவின் இந்த போட்டோ சுமார் 25ஆம் லைக்ஸ்களை அள்ளியுள்ளது. பலரும் இந்த போட்டோ ரொம்பவே க்யூட்டாக உள்ளது என கமெண்ட் பதிவிட்டுள்ளனர். நடிகை பிரியங்கா சோப்ரா வீ கேன் பி ஹீரோஸ், தி மேட்ரிக்ஸ் 4, தி வொய்ட் டைகர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











