திணற வைக்கும் டெல்லி காற்று மாசு.. இந்த நிலைமையில் இங்க எப்டி வாழறது.. பிரபல நடிகை வேதனை!
டெல்லி: டெல்லி காற்று மாசு குறித்து பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா வேதனை தெரிவித்திருக்கிறார்.
டெல்லியில் கடந்த சில நாட்களாய் காற்று மாசு கடுமையாக உள்ளது. தீபாவளியை தொடர்ந்து ஏற்பட்ட காற்று மாசால் மக்கள் மூச்சு விடவே சிரமம் ஏற்படும் நிலை உருவாகியிருக்கிறது.
காற்று மாசால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். கடுமையான காற்று மாசால் முகமூடி அணியாமல் வெளியே வரவேண்டாம் என மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மாசு அதிகரிப்பு
அதேநேரத்தில் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கட்டுமானப்பணிகளை மேற்கொள்ளவும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டெல்லியில் காற்று மாசு தற்போது அதிகரித்துள்ளது.

கடினமாக உள்ளது
இந்நிலையில் டெல்லியில் நிலவும் காற்று மாசு குறித்து நடிகை பிரியங்கா சோப்ரா வேதனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாஸ்க்குடன் செல்பி ஒன்றை ஷேர் செய்துள்ள பிரியங்கா, காற்று மாசால் டெல்லியில் தி வொய்ட் டைகர் படத்தின் ஷுட்டிங் செய்வது கடினமாக உள்ளது.

பிரார்த்தனை செய்யுங்கள்
இதுபோன்ற நிலைமையில் இங்கு எப்படி வாழ்வது என்று நினைத்து கூட பார்க்கமுடியவில்லை. நாம் காற்று சுத்திகரிப்பு மற்றும் முகமூடிகளால் ஆசீர்வதிக்கப்பட்டு இருக்கிறோம். வீடு இல்லாதவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.. எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள் என்று பதிவிட்டிருக்கிறார்.
View this post on InstagramA post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on
அரவிந்த் அதிகாஸ் நாவல்
பிரியங்கா சோப்ரா தற்போது தி வொய்ட் டைகர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அரவிந்த் அதிகாஸின் தி வொயிட் டைகர் என்ற நாவலை தழுவி எடுக்கப்படுகிறது. இதில் பிரியங்கரா சோப்ரா மற்றும் ராஜ்குமார் ராவ் ஆகியோர் லீடிங் ரோலில் நடிக்கின்றனர்.

தடைபடும் சூழல்
இயக்குநர் ராமின் பரணி இந்த படத்தை இயக்குகிறார். தி வொயிட் டைகர் படத்தின் ஷுட்டிங் அண்மையில்தான் தொடங்கியது. இந்நிலையில் டெல்லி காற்று மாசால் படத்தின் ஷுட்டிங் தடைப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











