Actress Priyanka Mohan: பிரியங்காவோட செம ஆட்டம் போட்ட பூமிகா.. அட சூப்பரா ஆடுறாங்களே!

சென்னை: நடிகர் ஜெயம் ரவி தற்போது அதிகமான படங்களில் நடித்த வருகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான இறைவன் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படம் அவருக்கு சிறப்பாக அமைந்தது. இந்தப் படத்தில் டைட்டில் கேரக்டரில் நடித்திருந்தார்.

அடுத்ததாக சைரன், பிரதர் என ஜெயம்ரவி நடித்து வரும் படங்களின் பட்டியல் நீண்டு காணப்படுகிறது.

Actress Priyanka Dance With Boomika and Brother Movie Team

நடிகர் ஜெயம்ரவி: நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்த சிறப்பான கதைக்களங்களில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் அவரத பொன்னியின் செல்வன் 2 மற்றும் முன்னதாக வெளியான பொன்னியின் செல்வன் படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மல்ட்டி ஸ்டார் படங்களாக வெளியான இந்தப் படத்தில் டைட்டில் கேரக்டரில் நடித்திருந்தார் ஜெயம்ரவி. இந்தப் படத்தை தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவரது இறைவன் படம் வெளியானது. இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன.

பிரதர் படம்: இந்நிலையில் அடுத்ததாக ஜெயம்ரவி நடிப்பில் எம் ராஜேஷ் இயக்கிவரும் பிரதர் படம் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது. காமெடி மற்றும் சகோதர -சகோதரியின் பாசத்தை மையமாக கொண்டு இநத்பப் படம் உருவாகிவருகிறது. இந்தப் படத்தின் ஜெயம்ரவியின் அக்காவாக பூமிகா நடித்து வருகிறார். பிரியங்கா மோகன் ஜோடி சேர்ந்துள்ளார். கடந்த விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியானது.

சூட்டிங் ஸ்பாட் வீடியோ: இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் ஸ்பாட் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த வீடியோவில் படத்தின் நாயகி பிரியங்கா மோகன், பூமிகா, சீதா மற்றும் சரண்யா ஆகியோர் காணப்படுகின்றனர். முன்னதாக சிவகார்த்திகேயனுடன் பிரியங்கா நடித்து வெளியான டான் படத்தின் டிக்டாக் பாடலின் இசைக்கு இவர்கள் ஆட்டம் போட்டுள்ளனர். குறிப்பாக அதிக உற்சாகத்துடன் பூமிகா ஆட்டம் போட்டதை இந்த வீடியோவில் பார்க்க முடிந்தது.

Actress Priyanka Dance With Boomika and Brother Movie Team

செம ஆட்டம் போட்ட நடிகைகள்: லிப்டிற்குள் உள்ள கண்ணாடியை பார்த்து இவர்கள் இந்த ஆட்டத்தை போட்டுள்ளனர். இந்தப் படத்தின் சூட்டிங் இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தை ஜனவரி 26ம் தேதி குடியரசு தினக் கொண்டாட்டமாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ஜெயம்ரவி பிரம்மாண்டமாக உருவாகிவரும் ஜெனி படத்திலும் நடித்து வருகிறார்.

ஜெயம்ரவியின் அடுத்தடுத்த படங்கள்: மிகவும் பிரம்மாண்டமாக 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் சென்னையில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு தொடர்ந்து 30 நாட்கள் நடத்தப்பட உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. ஜெயம் ரவி கேரியரில் மிகப்பெரிய அளவில் உருவாகிவரும் இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன், கிரீத்தி ஷெட்டி மற்றும் வாமிகா கபி ஆகியோர் இணைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X