செல்ஃபி கேட்ட ரசிகர்.. காட்டமாக பேசிய பிரியங்கா மோகன்.. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!
சென்னை: நடிகை பிரியங்கா மோகன் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் என்ட்ரி கொடுத்தவர். தொடர்ந்து அவருடனேயே டான் படத்திலும் இணைந்து நடித்திருந்தார். இந்த இரு படங்களும் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த நிலையில் கோலிவுட்டில் பிரியங்கா மோகனின் மவுசு எகிறியுள்ளது.
அடுத்தடுத்து சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர் என அடுத்தடுத்த படங்களில் நடித்துள்ள பிரியங்கா மோகன், தற்போது ஜெயம் ரவியுடன் இணைந்து பிரதர் படத்திலும் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நேற்றைய தினம் சென்னையில் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

நடிகை பிரியங்கா மோகன்: நடிகை பிரியங்கா மோகன் தமிழ். தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து நடித்து வருபவர். தமிழில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்த பிரியங்கா மோகன், தொடர்ந்து அவருடனேயே டான் படத்திலும் இணைந்து நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களுமே சிறப்பான வரவேற்பையும் வசூலையும் பெற்ற நிலையில் தொடர்ந்து சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் தனுசுடன் கேப்டன் மில்லர் என அடுத்தடுத்த வெற்றி பெற கூட்டணியில் இணைந்து படங்களை கொடுத்து வருகிறார் பிரியங்கா மோகன். இந்நிலையில் அடுத்ததாக ஜெயம் ரவியுடன் இணைந்து பிரதர் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ளது.
ரசிகரிடம் பிரியங்கா மோகன் கோபம்: பிரதர் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நேற்றைய தினம் சென்னையில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த படத்தின் இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஜெயம் ரவி, தன்னுடைய பர்சனல் விஷயங்கள் குறித்தும் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி நிறைவடைந்ததையடுத்து தன்னுடைய காரில் இருந்தபடி ரசிகர்களின் விருப்பத்திற்கு இணங்க அடுத்தடுத்த செல்ஃபிக்களை பிரியங்கா மோகன் எடுத்தார். இந்நிலையில் ஒரு ரசிகரிடம் அவர் மிகவும் கோபமாக பேசியதை பார்க்க முடிந்தது. இதன் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
சர்ச்சைக்குள்ளான பிரியங்கா மோகன்: ரசிகர்களின் ஆதரவால் தான் நடிகர், நடிகைகள் உருவாகி வருவதாகவும் ஆனால் அவர்களின் செல்ஃபி எடுப்பது உள்ளிட்ட சில ஆசைகளையும் முன்னணி நடிகர்கள், நடிகைகள் நிராகரிப்பதாகவும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர். ஏற்கனவே பிரதர் படத்தின் ஹீரோ ஜெயம் ரவி, தன்னுடைய சொந்த வாழ்க்கை குறித்த முடிவினால் மிகப் பெரிய விமர்சனங்களை பெற்றுவரும் சூழலில் தற்போது படத்தின் நாயகி பிரியங்கா மோகனும் தன்னுடைய பங்கிற்கு இத்தகைய சர்ச்சையில் சிக்கியுள்ளார். வளர்ந்துவரும் இளம் நடிகையான பிரியங்கா மோகன் இத்தகைய சர்ச்சைகளை தவிர்ப்பது நல்லது என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
அடுத்தடுத்த படங்கள்: அடுத்தடுத்து தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து வருகிறார் பிரியங்கா மோகன். சமீபத்தில் தெலுங்கில் நானியுடன் இணைந்து சரிபோதா சனிவாரம் படத்திலும் ஜோடி சேர்ந்திருந்தார். இந்தப் படம் சூர்யாவின் சனிக்கிழமை என்ற பெயரில் தமிழிலும் வெளியானது. இந்தப் படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. இதனிடையே, தனுஷின் இயக்கத்தில் 3வது படமாக உருவாகியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் கோல்டன் ஸ்பேரோ சமீபத்தில் வெளியான நிலையில், அந்தப் பாடலில் சூப்பரான ஆட்டம் போட்டிருந்தார். இதனிடையே அடுத்ததாக பிரதர் படமும் ரிலீசாகவுள்ளது.


Click it and Unblock the Notifications











