விஜய்யை நான் அசிங்கப்படுத்தவில்லை.. பிரியங்கா மோகன் கொடுத்த விளக்கம்.. வந்தது முற்றுப்புள்ளி

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாகி மெகா ஹிட்டான படம் டாக்டர். தற்போது முன்னணி நடிகை என்ற இடத்துக்கு சென்றுகொண்டிருக்கும் பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியான முதல் படம் அது. அவரது நடிப்பில் கடைசியாக சரிபோதா சனிவாரம் படம் வெளியானது. அடுத்ததாக பிரதர் படம் வெளியாகவுள்ளது. நிச்சயம் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் பிரியங்கா மோகன்.

சிவகார்த்திகேயன் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 2021ஆம் ஆண்டு வெளியான டாக்டர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் பிரியங்கா மோகன். படம் மெகா ஹிட்டானது மட்டுமின்றி பிரியங்கா மோகனின் நடிப்பும் பலமான வரவேற்பையே பெற்றது. இதனால் தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தன.

priyanka mohan vijay kushi

பிஸி பிரியங்கா: டாக்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார். சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் நடித்தார். கடைசியாக அவர் சரிபோதா சனிவாரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதில் தனது திறமையை நன்றாகவே வெளிப்படுத்தியிருந்தார். இப்படி பிஸியாக இருக்கும் பிரியங்கா மோகன் விரைவில் டாப் நடிகைகள் லிஸ்ட்டில் இணைந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவுக்கு அவர் கைவசம் படங்கள் இருக்கின்றன. அடுத்ததாக பிரதர் படம் தீபாவளி அன்று வெளியாகவிருக்கிறது.

சர்ச்சை: பிரதர் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்தபோது அவரிடம் செல்ஃபி கேட்டு ரசிகர்கள், ரசிகைகள் மொய்த்தனர். ஆனால் அவர்களிடம் சிடுசிடுவென்று பேசினார் பிரியங்கா அந்த வீடியோ ட்ரெண்டானது. அதனையடுத்து ஒரு ரசிகரிடமும், இப்படி எல்லாம் ஃபாலோ செய்து வரக்கூடாது என்றும் கூறினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டானது. அந்தப் பிரச்னைக்கு பிறகு சமீபத்தில் மீண்டும் பிரியங்காவை சுற்றி ஒரு பிரச்னை உருவானது.

என்ன சர்ச்சை?: அதாவது சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், "எஸ்.ஜே.சூர்யா குஷி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினால் அதில் பவன் கல்யாணைத்தான் நடிக்க வைக்க வேண்டும்" என்று தெரிவித்தார். ஏற்கனவே குஷி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் நடித்ததை தமிழ் ரசிகர்கள் கடுமையாக ட்ரோல் செய்த சூழலில் பிரியங்கா மோகன் எப்படி இப்படி சொல்லலாம் என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தனர்.

பிரியங்கா விளக்கம்: இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விளக்கம் கொடுத்திருக்கும் பிரியங்கா மோகன், "சரிபோதா சனிவாரம் படத்தின் நிகழ்ச்சியில் நான் பேசியதை பலரும் தவறாக புரிந்துகொண்டார்கள். இப்போது நான் பவன் கல்யாண் நடிக்கும் ஓஜி படத்தில் நடித்துவருகிறேன். அதனால் அன்று மேடையில் ஏறியதும் ஓஜி என்று கத்த ஆரம்பித்தார்கள். அந்த நிகழ்ச்சியில் எஸ்.ஜே.சூர்யாவும் இருந்தார். ஏற்கனவே குஷி 2 படத்தில் பிரியங்காவைத்தான் ஹீரோயினாக நடிக்க வைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அது அப்போது நியாபகம் வந்தது.

விஜய்தான் எப்போதும்: தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் இருந்ததால்தான் குஷி 2 படத்தில் பவன் கல்யாண் நடிக்க வேண்டும் என்று சொன்னேன். ஆனல் உண்மையில் நான் முதலில் பார்த்தது விஜய் நடித்த குஷி படத்தைத்தான். அந்தப் படத்தை பார்த்துவிட்டு நான் விஜய் ரசிகர் ஆகிவிட்டேன். விஜய்யின் நிறைய படங்கள் எனக்கு பிடிக்கும். அதுவே அன்று நான் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இருந்திருந்தால் விஜய் என்றுதான் சொல்லியிருப்பேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X