Actress Priyanka mohan: த்ரிஷாவை ஃபாலோ செய்யும் பிரியங்கா மோகன்.. அட தனுஷோட இப்படி ஒரு காம்பினேஷனா!

சென்னை: நடிகர் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஜனவரியில் பொங்கலையொட்டி வெளியான படம் கேப்டன் மில்லர். சுதந்திர போராட்ட காலத்தையொட்டி வெளியான இந்தப் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியிருந்தார். இந்தப் படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக அமைந்துள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்த கையுடன் தன்னுடைய இயக்கத்தில் அடுத்தடுத்து ராயன் மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என இரு படங்களை எடுத்துள்ளார் தனுஷ். இதில் ராயன் படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

தனுஷ் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள ராயன் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதனிடையே நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி நடித்து தன்னுடைய வொண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்தும் வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் 70 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. இதனிடையே சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்திலும் நடித்து வருகிறார். ராயன் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்சிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் அடிக்கடி மும்பைக்கும் சென்னைக்கும் பறந்து பறந்து வேலை செய்து வருகிறார். இதனிடையே நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் பாடல் சூட்டிங்கையும் தற்போது நிறைவு செய்துள்ளார்.

Actress Priyanka mohan joins Dhanush s Nilavukku en mel ennadi kobam movie song

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் நடிப்பு, தயாரிப்பு, இயக்கம், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளுடன் கோலிவுட்டில் மட்டுமில்லா ஹாலிவுட் வரை தன்னுடைய எல்லைகளை விரிவு படுத்தியுள்ளார். கடந்த ஜனவரியில் பொங்கல் பண்டிகையையொட்டி அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அவர் நடித்திருந்த கேப்டன் மில்லர் படம் ரிலீசானது. சுதந்திர போராட்ட காலகட்டத்தை மையமாக கொண்டு வெளியான இந்தப் படத்தில் தனுஷூடன் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். தாடி, மீசை, நீண்ட தலைமுடியுடன் இந்தப் படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருந்தார் தனுஷ். படம் சூப்பர் ஹிட்டடித்தது.

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்: இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய இயக்கத்தில் அடுத்தடுத்து ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என படங்களை இயக்கியுள்ளார். இதில் ராயன் படத்தின் சூட்டிங் முழுமையாக நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அடுத்த மாதத்தில் இந்தப் படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் கேரக்டர் போஸ்டர்களை அடுத்தடுத்த நாட்களில் வெளியிட்டு மாஸ் காட்டினார் தனுஷ். படத்தில் எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சரவணன், துஷாரா விஜயன், அபர்ணா முரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

தனுஷ் இயக்கத்தில் பிரியங்கா மோகன்: இந்தப் படத்தை தொடர்ந்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை இயக்கி நடித்து தன்னுடைய வொண்டர்பார் நிறுவனம்மூலம் தயாரித்தும் வருகிறார். படத்தில் அவரது அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். மேலும் அனைகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், சரத்குமார் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இதனிடையே இந்தப் படத்தின் பாடல் காட்சி தற்போது சென்னையில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலில் சமீபத்தில் தனுஷுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்த பிரியங்கா மோகன் மற்றும் ஜிவி பிரகாஷ் இணைந்து நடனமாடியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

த்ரிஷாவை ஃபாலோ செய்யும் பிரியங்கா மோகன்: விஜய்யின் The greatest of all time படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் விஜய்யுடன் இணைந்து நடிகை த்ரிஷா ஒரு பாடலுக்கு நடனமாடவுள்ளார். இந்நிலையில் த்ரிஷாவை பின்பற்றி தற்போது பிரியங்கா மோகனும் தனுஷ் இயக்கத்தில் உருவாகிவரும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் ஒரு பாடலில் நடனமாடவுள்ளார். நாயகியாக மட்டும்தான் நடிப்பேன் என்றெல்லாம் கண்டீஷன் போடாமல் தங்களுக்கு முன்னணி நடிகர்களின் படங்களில் இணைய கிடைக்கும் வாய்ப்புகளை நாயகிகள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்வது ஆரோக்கியமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X