சிவகார்த்திகேயன், தனுஷ், சூர்யா.. இதுல பிரியங்கா மோகனுக்கு யாரை போல கணவர் வேண்டுமாம் தெரியுமா?

சென்னை: பொதுவாகவே சினிமா விழாக்களில் இளம் நடிகைகளை பார்த்தாலே உங்களுக்கு காதலர் இருக்கிறாரா? என்ன மாதிரியான மாப்பிள்ளையை எதிர்பார்க்குறீங்க போன்ற கேள்விகள் எழத்தான் செய்கின்றன. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை பிரியங்கா மோகனிடம் உங்களுக்கு எந்த நடிகர் போல மாப்பிள்ளை வேண்டும் என கேட்க அவரும் பட்டென அந்த பிரபல நடிகர் பெயரை சொல்லியுள்ளார்.

ஒந்த் கதே எல்லா எனும் கன்னட படத்திலும் நானியின் கேங் லீடர் படத்திலும் நடித்து கடந்த 2019ம் ஆண்டு கன்னடம் மற்றும் தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை பிரியங்கா மோகன். அந்த இரு படங்களை விட அவருக்கு கோலிவுட்டில் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

priyanka mohan doctor movie suriya

சிவகார்த்திகேயனின் ராசியான ஹீரோயின்: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடித்த நிலையில், அந்த படம் 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. அதன் பின்னர் மீண்டும் டான் படத்திலும் இந்த ஜோடி நடித்த நிலையில், அந்த படமும் 100 கோடி வசூலை அள்ளியது. அதன் பின்னர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பிரியங்கா மோகன் நடிக்கவில்லை. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ், மாவீரன் உள்ளிட்ட படங்கள் 100 கோடி வசூலை தொடவில்லை.

பெண்கள்னாலே தப்பா பேசுவாங்க: இதனிடையே நிகழ்ச்சியொன்றில் பேசிய பிரியங்கா மோகன், சினிமா ஹீரோயின்கள் பற்றி வரும் வதந்திகள், நெகட்டிவிட்டி குறித்து நீங்க எப்படி பார்க்குறீங்க என்கிற கேள்விக்கு பொதுவாகவே சினிமா நடிகைகள் மட்டுமின்றி பெண்கள் என்றாலே தப்பா தான் பார்க்குறாங்க, தப்பா தான் பேசுறாங்க. அதையெல்லாம் நாம் கண்டுக்காமல் கடந்து போயாக வேண்டும் என்றார். தமிழ், தெலுங்கு மொழிகளில் ஹீரோயினாக நடிச்சிட்டு வருகிறீர்கள் அதை எப்படி மேனேஜ் பண்றீங்க என்ற கேள்விக்கு தொடர்ந்து ஹார்ட் வொர்க் பண்ணா எல்லாமே ஈஸி தான் என்றார்.

சூர்யா போல கணவர் வேண்டும்: நடிகர்கள் சிவகார்த்திகேயன், தனுஷ், சூர்யா மற்றும் நானியின் புகைப்படங்களை ஒவ்வொன்றாக திரையிட்டு இதில் யாரை போல கணவர் வேண்டும் என்கிற கேள்வி பிரியங்கா முன் வைக்கப்பட்டது. அதற்கு சிவகார்த்திகேயன் செம ஜாலியான பர்சன் என்றும் சூர்யாவை பார்த்த உடனே இவரை போல ஒருவர் கணவராக அமைய வேண்டும் என்றார். தனுஷை பார்த்த பிரியங்கா மோகன் ரொம்பவே ஹார்ட் வொர்க் செய்யக் கூடியவர் என்றார். நானியை பார்த்ததும் நல்ல நண்பர், நல்ல நண்பர் எனக்கு கணவராக வந்தாலும் சந்தோஷம் என்றார்.

ஆளே கிடைக்கல: இதுவரைக்கும் பிரியங்கா மோகன் யாரையும் காதலிக்கவில்லை என்றும் தான் ஒரு சிங்கிள் தான் என்றும் அந்த விழாவில் வெளிப்படையாக பேசியுள்ளார். இதை தெரிந்துக் கொண்டு தான் சில இளைஞர்கள் சமீபத்தில் பிரியங்கா மோகனை ஃபாலோ செய்து திட்டு வாங்கிக் கட்டிக் கொண்டார்களா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஜெயம் ரவி பற்றி கேட்கும் போது அவர் ரொம்பவே ஸ்வீட்டான பர்சன் என்றும் பிரியங்கா மோகன் பதில் அளித்தார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் நின்றிருந்த மேடை சரிந்து விழுந்ததில் சிறு காயங்களுடன் தப்பினார் பிரியங்கா மோகன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X