பிரியங்கா மோகனை முத்தமிட்ட சூரியன்.. சன் கிஸ்ஸிங் க்யூட் புகைப்படங்கள்!

Actress Priyanka Mohan With Sun Glasses Cute Photos

சென்னை: டாக்டர் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டான் படத்திலும் பிரியங்கா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்

குடும்ப படங்களுக்கு பெயர் போன இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தில் தற்போது ஹீரோயினாக நடித்து வருகிறார்

நடித்த சில படங்களிலேயே இப்பொழுது மிகப் பிரபலமான நடிகையாக தமிழ் சினிமாவில் உள்ள பிரியங்கா இப்பொழுது சூரியன் முத்தமிட்ட அழகிய க்யூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது வைரலாகி வருகிறது.

கடத்தலை கதைக் களமாக

கடத்தலை கதைக் களமாக

கோலமாவு கோகிலா வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் நெல்சன் சிவகார்த்திகேயனுடன் இணைந்த டாக்டர், சிவகார்த்திகேயனின் படங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமான திரைப்படமாக உருவானது. வழக்கமாக கடத்தலை கதைக் களமாகக் கொண்டு படங்களை எடுக்கும் நெல்சன் டாக்டர் படத்திலும் பெண் குழந்தைகளை கடத்தல் பற்றி எடுத்திருந்தார்.

க்யூட்டான நடிப்பை

க்யூட்டான நடிப்பை

சிவகார்த்திகேயன் இதுவரை தனது காமெடி கவுண்ட்டர்கள் மூலம் மற்றவர்களை டேமேஜ் செய்வார் ஆனால் டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் பெரிதாக பேசாதவாறு அவரது கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும். டாக்டர் படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகனுக்கு இடையேயான காதல் காட்சிகள் ரசிகர்கள் அனைவரையும் பெரிதாக கவர்ந்தது

எதற்கும் துணிந்தவன்

எதற்கும் துணிந்தவன்

தமிழில் அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களின் கனவுக் கன்னியாக ஆன பிரியங்கா தமிழில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். அந்த வகையில் இப்போது கூட்டு குடும்ப படங்களுக்கு பெயர் போன இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் எதற்கும் துணிந்தவன் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்

மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக

மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக

எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பு முடிந்து தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று கொண்டுள்ளது இந்த படத்தில் சூர்யா மற்றும் பிரியங்காவுக்கு இடையே கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது . டாக்டர் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டான் படத்தில் பிரியங்கா நடித்து வருகிறார்.

சன் கிஸ்ஸிங்

சன் கிஸ்ஸிங்

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் படங்களில் நடித்து அங்கும் பிரபலமான நடிகையாக உள்ள பிரியங்கா தமிழ் மற்றும் தெலுங்கு மிக சரளமாக பேசக்கூடியவர். அடிக்கடி சமூக வலைதளங்களில் க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஏங்க விடும் இவர் இப்பொழுது சூரியன் முத்தமிட்ட சன் கிஸ்ஸிங் க்யூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X