உருகுதே மருகுதே ..வெயில் பட நாயகியின் கலக்கல் பிக்ஸ் !
கொச்சி : கலக்கலான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார் வெயில் பட நாயகி பிரியங்கா நாயர் ,பார்த்து ரொம்ப நாள் ஆச்சே என்று ரசிகர்கள் பீலிங்ஸ் கமெண்ட்ஸ் கொடுத்து வருகின்றனர்.
வெயில் படத்தின் மூலம் அறிமுகம் ஆன பிரியங்கா ,உருகுதே மருகுதே என்ற பாடல் மூலம் அனைவராலும் அறியப்பட்டார்.தமிழில் தொலைப்பேசி,திருத்தம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வந்த பிரியங்கா ,தனக்கென்று ஒரு தனி இடம் பிடித்து கொண்டார் .பல சிறந்த நடிகைக்கான விருதுகளையும் பெற்றார் .

ஷங்கர்
மலையாளத்தில் டிவி தொடர்களிலும் ,விளம்பரங்களிலும் நடித்து வந்த பிரியங்கா ,தனது சிறந்த நடிப்பினால் நன்கு அறியப்பட்டார் .பின்பு தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது .வசந்த பாலன் இயக்கத்தில்,ஷங்கர் தயாரித்த இந்தப்படத்தில் பசுபதியுடன் சேர்ந்து நடித்தார் .அப்படத்தில் அனைத்து பாடல்களும் மெகா ஹிட்டானது .

பல வெற்றி
வெயில் படத்தை தொடர்ந்து தொலைபேசி ,திருத்தம் போன்ற படங்களில் நடித்தார் .வெயில் பட அளவிற்கு இந்த படங்கள் ஏதும் பேசப்படவில்லை என்பதனால் தொடர்ந்து மலையாளத்தில் தனது கவனத்தை செலுத்தி வந்தார். மலையாளத்தில் பல ஹிட் படங்களை கொடுத்து .சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார் .

ரசிகர்கள் ஃபீலிங்ஸ்
தொடர்ந்து ஆறு வருடங்களுக்கு மேல் மலையாள சினிமாவில் கவனம் செலுத்தி வந்த பிரியங்கா ,உற்றான் என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார். ஊரடங்கு சமயம் என்பதால் தனது அழகான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார் பிரியங்கா .இந்த பதிவை பார்க்கும் ரசிகர்கள் இவ்ளோ நாளா எங்க போனீங்க ..எவ்ளோ அழகா இருக்கீங்க என்று பல பல கமெண்ட்ஸ் கொடுத்து வருகின்றனர் .

வரைட்டிஸ்
சமூகவலைத்தளங்களில் அவ்வவ்போது பல அற்புதமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் பிரியங்கா ,ரசிகர்களில் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் . புடவையில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்திற்கும் அவரது ரசிகர்கள் பல வகையான கமெண்ட்ஸ் கொடுத்து வருகின்றனர் .புடவையில் மிகவும் அழகாக இருக்கீங்க.,போன்ற பதிவுகள் வந்த வண்ணம் உள்ளது. பல நடிகைகள் கவர்ச்சியாக புகைபடங்கள் வெளியிட்டு ,நெட்டிசன்களிடம் பல சர்ச்சைகளில் சிக்கும் பிரபலங்களுக்கு மத்தியில் ,அழகான அம்சமான புகைப்படங்களை வெளியிட்டு பல பாசிட்டிவ் கமெண்ட்ஸ் பெற்று ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் ப்ரியங்கா.


Click it and Unblock the Notifications











