கோலிவுட்டிலும் ஹாலோவின் ஆரம்பம்.. கிரேக்க கடவுளான ராய் லக்‌ஷ்மி!

ஹாலோவின் திருவிழாவை முன்னிட்டு நடிகை ராய் லக்‌ஷ்மி, கிரேக்க கடவுள் வேடமணிந்து போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சென்னை: ஹாலிவுட், பாலிவுட் என ஹாலோவின் திருவிழா களைகட்டி வருகிறது. இந்நிலையில், கோலிவுட்டிலும் ஹாலோவின் திருவிழாவை இறக்குமதி செய்துள்ளார் நடிகை ராய் லக்‌ஷ்மி.

ஹாலோவின் திருவிழா கொண்டாட்டத்திற்காக கிரேக்க கடவுள் வேடமணிந்து எடுத்து கொண்ட புகைப்படங்களை ராய் லக்‌ஷ்மி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சிண்ட்ரெல்லா எனும் பேய் படத்தில், ராய் லக்‌ஷ்மி நடித்துள்ள நிலையில், இந்த ஆண்டு ஹாலோவின் கொண்டாட்டத்தை அவர் மிஸ் செய்யவில்லை.

மிரட்டும் ஹெய்தி க்லம்

மிரட்டும் ஹெய்தி க்லம்

இந்த ஆண்டு ஹாலோவின் திருவிழாவில் ஹாலிவுட் நடிகை ஹெய்தி க்லம் அனைவரையும் மிரட்டியுள்ளார். செக்ஸி டிராகுலா பேயாக பிராஸ்தெடிக் உடை அணிந்து ஹெய்தி க்லம் இந்த ஹாலோவின் திருவிழாவை வேற லெவலுக்கு கொண்டு சென்றுள்ளார். மேலும், இந்த ஆண்டிற்கான சிறந்த ஹாலோவின் காஸ்ட்யூம் விருதையும் ஹெய்தி க்லம் வென்றுள்ளார்.

புறக்கணிப்பு

புறக்கணிப்பு

பாலிவுட்டில் ஹாலோவின் திருவிழாவை சோனம் கபூர், சன்னி லியோன், பிபாஷா பாசு உள்ளிட்ட நடிகைகள் கொண்டாடியுள்ள நிலையில், பிரபல நடிகைகளான, தீபிகா படுகோனே, ஃபேஷன் பிரியையான பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பல நடிகைகள் புறக்கணித்துள்ளனர்.

சிண்ட்ரெல்லா

வினு வெங்கடேஷ் இயக்கத்தில் ராய் லக்‌ஷ்மி நடிப்பில் உருவாகி வரும் பேய் படம் சிண்ட்ரெல்லா. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் சாக்‌ஷி வில்லியாக நடித்துள்ளார். நீயா 2 படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத நிலையில், சிண்ட்ரெல்லா படத்தை ராய் லக்‌ஷ்மி பெரிதும் எதிர்பார்த்துள்ளார்.

கிரேக்க கடவுள்

சிண்ட்ரெல்லா எனும் பேய் படத்தில் நடித்துள்ள நடிகை ராய் லக்‌ஷ்மி, இந்த ஆண்டு ஹாலோவின் திருவிழாவை கொண்டாடியுள்ளார். இதற்காக வெள்ளை நிற கவர்ச்சி கவுன் மற்றும் முகமூடி அணிந்து ராய் லக்‌ஷ்மி கொடுத்துள்ள கிரேக்க கடவுள் லுக், அவரது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X