Raai lakshmi: அடையாளமே தெரியாமல் மொத்தமாக மாறிய ராய்லட்சுமி.. எல்லாத்துக்கும் காரணம் அது தான்!
சென்னை: பெங்களுரில் பிறந்தராய் லட்சுமி, சினிமா மீது இருந்த ஆர்வத்தால், கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த போதே, மாடலிங்கில் நுழைந்தார். இவர் முதன்முதலாக புரூ காஃபி விளம்பரத்தில் நடித்தார். அதன் பின் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர்அண்ட் லவ்லி விளம்பரத்திலும் நடித்திருந்தார். விளம்பரங்களில் கிடைத்த வரவேற்பிற்கு பின் தான் கற்க கசடற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார். இப்படி படிப்படியாக வளர்ந்து வந்த ராய்லட்சுமிக்கு இப்போது படவாய்ப்பே இல்லாமல் போனதால், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோவை ஷேர் செய்து வருகிறார்.
நடிகை ராய் லட்சுமி கற்க கசடற படத்தில் விக்ராந்த்துடன் ஜோடியாக அஞ்சலி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இப்படம் சரியான வரவேற்பை பெறாமல் தோல்விப்படமானது. முதல் படமே தோல்விபடமான பிறகும், தமிழில் நிச்சயம் பெயர் சொல்லும் அளவிற்கு படவாய்ப்பு வரும் என காத்திருந்த ராய் லட்சுமிக்கு, தமிழில் படவாய்ப்பு இல்லாததால் தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு, காஞ்சனா கேபிள் டிவி என்ற படத்தில் நடித்தார். அந்த திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

நடிகை ராய் லட்சுமி: இதன்பின் ஜெயம் ரவியுடன் தாம்தூம் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். அந்த படத்தில் இடம் பெற்ற யாரோ மனதிலே பாடல் இவருக்கு தமிழ் ஆடியன்ஸ் மனதில் இடத்தை பிடிக்கவைத்தது. அதன் பின், முத்திரை, வாமனன், நான் அவன் இல்லை 2, ஒரு காதலன் ஒரு காதலி என தமிழில் அடுத்தடுத்து படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், இவர் நடித்த எந்த படமும், இவருக்கு ஒரு அடையாளத்தை தரவில்லை. திறமையும் அழகும் இருந்தும், சரியான கதைகளை தேர்வு செய்யாததால் அவரால் சினிமாவில் உயரத்தை தொட முடியவில்லை.
அடையாளமே தெரியல: தமிழ், தெலுங்கு என எதுவும் வேலைக்கு ஆகாததால், பாலிவுட் சென்ற லட்சுமி ராய், அங்கு ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சியாக ஆட்டம் போட்டு ஓரளவிற்கு சம்பாதித்து வந்தார். பின் லெஜண்ட் சரவணன் நடித்த தி லெஜண்ட் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். கடந்த ஆண்டு ராய் லட்சுமி மலையாளத்தில் டிஎன்ஏ என்ற படத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருந்தார். மேலும் பாய்சன் 2 என்ற வெப் தொடரிலும் நடித்திருந்தார். எந்த பக்கம் போனாலும், பட வாய்ப்பு எதுவும் வராததால், பட வாய்ப்பை பெற தற்போது இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து கவர்ச்சி போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்த போட்டோவில் கவர்ச்சி தூக்கலாக இருந்தாலும், பட வாய்ப்பு வரவில்லை. அம்மணி உடல் எடையை குறைத்து ஒல்லியாக இருப்பதால், இவரைப்பார்த்த ரசிகர்கள் பலர் ராய் லட்சுமியா இது... அடையாளமே தெரியவில்லையே என கேட்டு வருகின்றனர். இன்னும் சிலர் நல்ல நடிகை படமே இல்லாததால் கவலையில் இப்படி ஆகிவிட்டார் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











