சொகுசு கார் முன்.. சோக்கா போஸ் கொடுத்த பிரபல தமிழ் நடிகை!
சென்னை : விரைவில் வெளியாக இருக்கும் வெப்சீரிஸ் ஒன்றில் நடிகை ராய் லட்சுமி ஆடையில்லாமல் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தி இருந்தது.
கடைசியாக இவரது நடிப்பில் வெளியான நீயா 2 திரைப்படம் தோல்வியடைந்த நிலையில் அடுத்த படம் கண்டிப்பாக வெற்றி கொடுத்தே ஆகவேண்டும் என தரமான கதைகளை தேர்ந்தெடுத்து ராய் லட்சுமி நடித்து வருகிறார்.
ஜான்சி, சின்ரெல்லா, ஆனந்த பைரவி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வரும் ராய் லட்சுமி இப்போது பாய்சன் 2 என்ற வெப்சீரிஸிலும் நடித்து வருவதையொட்டி இந்த சீரிஸ் வருகிற அக்டோபர் 16ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது, இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிட்டுள்ள செம கிளாஸான புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

அசராத கவர்ச்சியின்
பார்க்க வெள்ளை வெளேரென ஹாலிவுட் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு செம அழகாக இருக்கும் நடிகை ராய் லட்சுமி தனது கொஞ்சும் நடிப்பின் மூலமும், அசராத கவர்ச்சியின் மூலமும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து இந்தியாவில் பல மொழிகளில் கலக்கு கலக்கி வருகிறார்.

சிறப்பு தோற்றத்தில்
சமீபகாலமாக இவர் நடிக்கும் திரைப்படங்களில் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாகவே இருந்துவரும் நிலையில், நடிப்பில் மட்டுமல்லாமல் ஒரு சில படங்களில் பாடல்களுக்கும் சிறப்பு தோற்றத்தில் வந்து கவர்ச்சியைக் கொட்டியவாறு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை கவர்ச்சிக் கடலில் நீந்த விடுகிறார்.

அளவில்லாத கவர்ச்சிக்கு
சமீபத்தில் இவர் நடித்து வெளியான ஜூலி 2 மற்றும் நீயா 2 போன்ற படங்களில் இவர் காட்டிய அளவில்லாத கவர்ச்சிக்கு ஏங்காத ரசிகர்களே இல்லை, அந்த அளவிற்கு படுபயங்கர கிளாமரில் நடித்திருந்த ராய் லட்சுமிக்கு ரசிகர்களின் கூட்டம் நாளுக்கு நாள் எகிறிக் கொண்டே போகிறது.

பாய்சன் 2
இந்நிலையில் இப்போது நடித்துவரும் பாய்சன் 2 வெப்சீரிஸில் இவர் ஆடையில்லாமல் நடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் ரசிகர்கள் பலரும் பார்க்க காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் இந்தக் சீரிஸ் வருகிற அக்டோபர் 16ம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது.

செம ஆக்டிவாக
பாய்சன் 2 வெப்சீரிஸை தொடர்ந்து, கன்னடத்தில் ஜான்சி, தமிழில் சின்ரெல்லா மற்றும் தெலுங்கில் ஆனந்த பைரவி என தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் இவர் அதே சமயம் சமூக வலைதளங்களிலும் செம ஆக்டிவாக தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

செம ஸ்டைலிஷாக
அவ்வாறு இவர் பதிவிடும் புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களை குளிர்வித்து வருவதோடு வைரலாகியும் வருகிறது. இந்நிலையில் வெள்ளை நிற சொகுசு காரில் சாய்ந்துக் கொண்டு, வெள்ளை வெளேரென ஆரஞ்சு டிரஸ்ஸில் செம ஸ்டைலிஷாக நின்றவாறு ராய் லட்சுமி வெளியிட்டுள்ள இந்தக் கண்ணைப் பறிக்கும் வெண்மை புகைப்படத்தை பார்த்த பலரும் இதில் எது ரொம்ப வெள்ளையா இருக்கு என வர்ணித்தவாறு லைக்குகளை குவித்து வைரலாகி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











