டாப் ஆங்கிளில் பிரபல நடிகையின் 'பிங்க்' செல்ஃபி.. இதுக்கு மேல லீன் ஆகிடாதீங்க.. கெஞ்சும் ஃபேன்ஸ்!
சென்னை: டாப் ஆங்கிளில் பிரபல நடிகை வெளியிட்டுள்ள செல்ஃபி போட்டோ வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் கிளாமரில் கலக்கும் நடிகைகளில் ஒருவர் ராய் லட்சுமி. அவர் நடித்த படங்களில் கண்டிப்பாக அவருக்காகவே வைத்திருப்பார்கள், கிளுகிளு காட்சிகளை.
இதற்காகவே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். தமிழில், கற்க கசடற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் இவர்.

சிண்ட்ரெல்லா
பிறது விஜயகாந்தின் தர்மபுரி, முத்திரை, நான் அவன் இல்லை 2, காஞ்சனா, மங்காத்தா, அரண்மனை உட்பட பல படங்களில் நடித்தார். இப்போது சிண்ட்ரெல்லா என்ற படத்திலும் தெலுங்கில் ஆனந்த பைரவி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்தியில் பாய்சன் என்ற வெப்சீரிஸின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். இதை விஷால் பாண்டியா இயக்குகிறார். கொரோனா லாக்டவுனால் இதன் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள்
கொரோனா, உலகம் முழுவதும் மிரட்டி வருகிறது. இதன் பாதிப்பில் பலர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருந்தும் இதனால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

செல்ஃபி போட்டோ
இதன் காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால், நடிகைகள், இன்ஸ்டாகிராமில் பொழுதை கழித்து வருகிறார்கள் பெரும்பாலான நடிகைகள். அதில் நடிகை ராய் லட்சுமியும் ஒருவர். அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இவர் வெளியிட்ட த்ரோபேக் பிகினி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இப்போது அவர் தனது செல்ஃபி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

பிங்க் நிற டிரெஸ்
கொஞ்சம் டாப் ஆங்கிளில் வைத்து அவர் எடுத்துள்ள அந்த செல்ஃபி போட்டோஸ் வேகமாக பரவி வருகிறது. பிங்க் நிற டிரெஸ்சில் அவர் எடுத்துள்ள அந்த போட்டோவில், மிகவும் ஒல்லியாக இருக்கிறார், நடிகை ராய் லட்சுமி. இதனால் ரசிகர்கள் பலர், ஏற்கனவே நல்லா ஒல்லியாகிட்டீங்க. இன்னும் ஒல்லியாகிடாதீங்க என்று அட்வைஸ் செய்துள்ளனர். பலர் அவர் அழகை கண்டபடி வர்ணித்துள்ளனர்.

பிங்க் மயம்தான்
நடிகை ஷாமா சிக்கந்தர், ஹாய் என் பிங்கி என்று கமென்ட் பதிவிட்டுள்ளார். அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார் ராய் லட்சுமி. ஒரு நெட்டிசன், பிங்க் நிறம் செம. டிரெஸ்சும் பிங்க், லிப்ஸ்டிக்கும் பிங்க், ஒரே பிங்க் மயம்தான் போங்க என்று கூறியுள்ளார். இன்னொருவர், உங்க தோற்றம் அப்படியே மினுக்குது என்று தெரிவித்துள்ளார். சிலர் இந்த போட்டோவுல லட்சுமி ராய் மாதிரியே தெரியலையே என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











