ஹீரோயின்கள் காஜல், தமன்னா, சமந்தா வரிசையில்... இப்போது களத்தில் இறங்கினார் ராய் லட்சுமியும்
சென்னை: நடிகை ராய் லட்சுமி முதன்முறையாக, வெப் சீரிஸில் நடிக்கிறார்.
கற்க கசடற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராய் லட்சுமி. பின், தர்மபுரி, முத்திரை, நான் அவன் இல்லை 2, காஞ்சனா, மங்காத்தா, அரண்மனை உட்பட பல படங்களில் நடித்தார்.
இப்போது சிண்ட்ரல்லா, மிருகா படங்களில் நடித்து வருகிறார். கன்னடத்தில் ஜான்சி படத்தில் நடித்துள்ளார்.

ஹாட் பிகினி
ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என கலக்கிய ராய் லட்சுமிக்கு இப்போது அதிக வாய்ப்பில்லை. இருந்தாலும் அவ்வப்போது ஹாட் பிகினி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பி வருகிறார்.

வெப்சீரிஸ்
இவர் இப்போது வெப்சீரிஸில் நடித்துவருகிறார். பாய்சன் என்ற இந்தித் தொடரின் இரண்டாம் பாகத்தில் அவர் நடிக்கிறார். இந்த தொடரை விஷால் பாண்டியா இயக்குகிறார்.

அப்தாப் ஷிவ்தசானி
பூஜா சோப்ரா, கவுதம் குலாடி, தஹர் ஷபிர் ஆகியோர் நடிக்கின்றனர். பிரபல இந்தி நடிகர் அப்தாப் ஷிவ்தசானி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இவர், தமிழில் பாஸ்கர் த ராஸ்கல் என்ற படத்தில் நடித்தவர். இந்த தொடர் ஏப்ரல் மாதம் ஒளிபரப்பாக இருக்கிறது.

தமன்னா, சமந்தா
பிரபல நடிகைகளான காஜல் அகர்வால், தமன்னா, சமந்தா உட்பட பல முன்னணி ஹீரோயின்களும் இப்போது வெப் சீரிஸ் பக்கம் திரும்பியுள்ளனர். இதையடுத்து மற்ற நடிகர், நடிகைகளும் வெப் சீரிஸில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ராய் லட்சுமியும் இதில் இணைந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











