ஹாலிவுட் ஹீரோயினுக்கே டஃப் கொடுத்த ராய் லட்சுமி… உருகி உருகி பார்க்கும் ரசிகர்கள்!

சென்னை : சைமா விருது வழங்கும் விழாவில் ஹாலிவுட் ஹீரோயின்களுக்கே சவால்விடும் வகையில் கலக்கலான உடை அணிந்து அனைவரையும் வாய் பிளக்க வைத்தார் ராய் லட்சுமி.

இந்த புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வரும் நிலையில், ராய் லட்சுமியின் ரசிகர்கள் அதை வைரலாக்கி வருகின்றனர்.

ராய் லட்சுமியை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 2 மில்லியனைத் தாண்டி உள்ளது. கூடிய விரைவில் 3 மில்லியனை தொட்டு விடுவார்.

மாடல் அழகி

மாடல் அழகி

மாடல் அழகியான ராய் லட்சுமி சினிமாத்துறையில் நுழைவதற்கு முன்பு பல விளம்பர படங்களில் நடித்துள்ளார். புரூ காஃபி விளம்பரத்திலும், சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர்அண்ட் லவ்லி விளம்பரத்திலும் நடித்துள்ளார். இந்த விளம்பரங்களில் கிடைத்த வரவேற்பை அடுத்தே இவர் சினிமாவில் நுழைந்தார்.

தமிழில் அறிமுகம்

தமிழில் அறிமுகம்

ஆர்.வி உதயக்குமார் இயக்கத்தில் உருவான கற்க கசடற திரைப்படத்தில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் தனது அறிமுகத்தை கொடுத்தார். இப்படத்தில் விக்ராந்த்துடன் ஜோடி போட்டு நடித்திருந்தார் ராய் லட்சுமி. இத்திரைப்படம் சரியான வரவேற்பை பெறாமல் தோல்வியைத் தழுவியது.

பல படங்களில்

பல படங்களில்

ஜெயம் ரவி, கங்கணா ரனாவத் நடிப்பில் வெளியான தாம்தூம் திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தார். இதையடுத்து, முத்திரை, வாமனன், நான் அவன் இல்லை2, ஒரு காதலன் ஒரு காதலி என தமிழில் அடுத்தடுத்து நடிக்க ஒப்பந்தமானார். தற்போது இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம் படங்களில் நடித்து வருகிறார்.

கவர்ச்சி புயலாக

கவர்ச்சி புயலாக

நடிகைகளின் கடைசி ஆயுதமான கவர்ச்சியை கையில் எடுத்த ராய் லட்சுமி, பல திரைப்படங்களில் கவர்ச்சி குயினாக வலம் வர ஆரம்பித்தார். இதையடுத்து ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா திரைப்படத்தில் கவர்ச்சி பதுமையாக படம் முழுக்க வலம் வந்திருந்தார்.

சிண்ட்ரெல்லா

சிண்ட்ரெல்லா

ராய் லட்சுமி நீண்டநாட்களுக்கு பிறகு சிண்ட்ரல்லா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 24ந் தேதி திரையரங்கில் வெளியாகி உள்ளது. ராய் லட்சுமி சிண்ட்ரெல்லா திரைப்படத்தையே பெரிதும் நம்பி உள்ளார். அழகான தேவதைக்கு அனைவரும் வியந்த பார்க்கும் படி ஒரு வாழ்க்கை கிடைக்கிறது. அதை பார்த்து பொறாமை படும் உறவினர்கள், அவளை பழிவாங்க நினைப்பதும் தான் கதை. பேய் படமாகவும், ஃபேண்டஸி படமாகவும் உருவாகி உள்ள இந்த ராய் லட்சுமி 3 வேடத்தில் நடித்துள்ளார்.

Recommended Video

சின்ன குழந்தை போல் தேம்பி அழுத Rai Laxmi | இந்த Problemனால தான் Injectionனா பயம்
கலக்கலான உடையில்

கலக்கலான உடையில்

இந்நிலையில், நடிகை ராய் லட்சுமி தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவான சைமா 2021 விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அந்த விழாவில் ராய் லட்சுமி போட்டிருந்த உடை அனைவரையும் கவர்ந்து இழுத்தது என்றே சொல்லலாம்... கருநீல நிறத்தில் இருந்த உடை பளபளத்து அவரின் அழகை மேலும் கூட்டியது. அந்த உடைக்கு ஏற்றார் போல் கம்மலும், கையில் மோதிரமும் அணிந்திருந்தார். இந்த உடையில் ஹாலிவுட் ஹீரோயினுக்கே சவால் விடும் வகையில் அவர் இருந்தார். இந்த புகைப்படம் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பதிவிட்ட 9 மணிநேரத்தில் 25ஆயிரம் லைக்குகளை பெற்றுள்ளது.

கைவசம் வைத்துள்ளார்

கைவசம் வைத்துள்ளார்

ராய் லட்சுமி தற்போது சிண்ட்ரல்லா, கேங்ஸ்டார் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், ஜான்சி ஐபிஎஸ் என்ற கன்னடத் திரைப்படத்திலும், ஆனந்த பைரவி என்ற தெலுங்கு படங்களை கைவசம் வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X