பாலி தீவில் கவர்ச்சி போஸில் ராய் லட்சுமி.. நான் விதிகளை மீறுவேன்.. டிரெண்டாகும் பதிவு!
சென்னை: தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை, தற்போது இந்தோனேசியாவின் பாலி தீவிற்கு சென்றுள்ளார். அங்கு கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
நடிகை ராய் லட்சுமி, 2005 ஆம் ஆண்டு வெளியான கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே அழகும், திரை முன்னிலையில் கொண்டுவரும் நம்பிக்கையும் காரணமாக கவனம் பெற்றார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த 'தாம் தூம்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ராவி மோகன் நடித்த இந்த படத்தின் மூலம் ராய் லட்சுமிக்கு தமிழ் ரசிகர்களிடையே தனி அடையாளம் கிடைத்தது.

நடிகை ராய் லட்சுமி : தமிழ் சினிமாவைத் தொடர்ந்து ராய் லட்சுமி தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார். குறிப்பாக, காஞ்சனா திரைப்படத்தில் கருப்பு பேரழகா பாடல் மற்றும் கவர்ச்சியான ஆட்டத்தின் மூலம் இளம் ரசிகர்களை வளைத்தப்போட்டார். பின் ஹிந்தி சினிமாவிலும் வாய்ப்பு பெற்ற ராய் லட்சுமி, Julie 2 என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஒரு காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிஸியாக இருந்த நடிகைகளில் ஒருவராக ராய் லட்சுமி இருந்தார். பல முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர், கவர்ச்சியான கதாபாத்திரங்களிலும், வித்தியாசமான வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லை.
கவர்ச்சி போட்டோஸ்: பட வாய்ப்புகள் குறைந்ததால், சமூக வலைதளங்களில் ராய் லட்சுமி தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வரும் இவர், தனது ஃபோட்டோஷூட் படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது, பாலி தீவிற்கு சுற்றுலா சென்றுள்ள ராய் லட்சுமி, அங்கு கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களில் சட்டை பட்டனை கழட்டிவிட்டு மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோ வெளியான சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகளையும் கமெண்ட்களை குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











