Raai laxmi: உள்ளாடை தெரிய க்யூட் போஸ்.. ராய் லட்சுமிக்கு மட்டும் வயசே ஆகாதா!
சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அடுத்தடுத்த மொழிகளில் நடித்து பான் இந்தியா ஸ்டாராக வலம் வருகிறார் நடிகை ராய் லட்சுமி.
தொடர்ந்து கிளாமராக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ராய் லட்சுமி. ராகவா லாரன்சுடன் காஞ்சனா படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.
இந்நிலையில் மலையாளத்தில் டிஎன்ஏ என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் ராய் லட்சுமி. இதற்காக அதிகமான பயிற்சி மேற்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

சமையலறையில் க்யூட் போட்டோஷுட் எடுத்த ராய் லட்சுமி: நடிகை ராய் லட்சுமி கிளாமர் குயினாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். பல ஆண்டுகளை கடந்தும் ரசிகர்களை தொடர்ந்து கட்டிப் போட்டு வருபவர். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்திப் படங்களில் நடித்து வருகிறார். தற்போது மலையாளத்தில் உருவாகியுள்ள டிஎன்ஏ என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியின் கெத்தை கொண்டுவருவதற்காக பயிற்சி மேற்கொண்டதாகவும் தனது சமீபத்திய பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
சஸ்பென்ஸ் க்ரைம் திரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தில் அதிகமான மேக்கப் இல்லாமல் ராய் லட்சுமி நடித்துள்ளார். 2 வருடங்களுக்கு பிறகு மலையாளத்தில் மீண்டும் களமிறங்கியுள்ள ராய் லட்சுமி, இந்த கேரக்டரில் நடிப்பது மிகுந்த சவாலாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இவரது நடிப்பில் தமிழில் கடைசியாக சிண்ட்ரெல்லா படம் வெளியானது. முன்னதாக காஞ்சனா, அரண்மனை, சௌகார்பேட்டை போன்ற த்ரில்லர் படங்களில் நடித்துள்ளார் ராய் லட்சுமி.

கிளாமருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படங்களில் நடித்துவந்த ராய் லட்சுமி கதைக்கும் முக்கியத்துவம் தந்து படங்களில் நடித்து வருவதை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். முன்னதாக ஒரே பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுவதையும் அதிகமாக செய்து வந்தார் ராய் லட்சுமி. சிரஞ்சீவியின் 150வது படமான கைதி நம்பர் 150 மற்றும் ராகவா லாரன்சின் மொட்ட சிவா கெட்ட சிவா போன்ற படங்களிலும் ஐட்டம் டான்சில் கலக்கியிருந்தார்.

பாலிவுட்டிலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்துவரும் ராய் லட்சுமி, சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார். அவரது அடுத்தடுத்த கவர்ச்சிப் புகைப்படங்கள், வீடியோக்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகின்றன. அவரது பதிவுகளால் கவரப்பட்டு தற்போது அவரை 72 லட்சம் பேர் இன்ஸ்டாகிராமில் பாலோ செய்து வருகின்றனர். தொடர்ந்து நவீன மற்றும் பாரம்பரிய உடைகளில் இவர் போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
பிகினியிலும் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குளிர்ச்சி படுத்தி வருகிறார் ராய் லட்சுமி. இந்நிலையில் தற்போது தன்னுடைய சமையலறையில் இருந்தபடி க்யூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ராய் லட்சுமி. இந்தப் புகைப்படங்களில் சாக்லேட்கள், பழங்கள், காபி என வெளுத்துக்கட்டுகிறார். உள்ளாடை தெரியும் வகையில் அமைந்துள்ள இந்தப் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகமான லைக்ஸ்களை கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











