ராய்லட்சுமியின் சேட்டைகள்.. விழுந்து விழுந்து ரசிக்கும் ரசிகர்கள்!
சென்னை : நடிகை ராய் லட்சுமி டிக்டாக் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளர்.
நம் தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் இருந்து வருகிறார்கள். பலர் திரைப்படங்களில் கேப் இல்லாமல் நடிப்பார்கள், ஒரு சிலர் வருடத்திற்கு ஓன்று அல்லது அதுவும் கூட நடிக்க மாட்டார்கள் ஆனால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பார்கள். அந்த வரிசையில் உள்ள நடிகைதான் ராய் லட்சுமி.

இவர் நடிப்பதோடு மட்டும் இல்லாமல் மாடலாகவும் இருக்கிறார். கற்க கசடற என்ற திரைப்படத்தின் மூலம் 16 வயதில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நடித்துக் கொண்டும் இருக்கிறார்.

தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார். காஞ்சனா படத்தில் பேயை பார்த்து பயந்தவர்களை விட இவரின் கவர்ச்சியை பார்த்து மயங்கியவர்கள்தான் அதிகம். இவ்வாறு பலரையும் கவர்ந்தவர் ராய் லட்சுமி. இவை அனைத்தும் தாண்டி பாலிவுட்டிலும் ஜூலி-2 என்ற படத்தின் மூலம் கால் பதித்தார். இப்படி பல வெற்றிகளை கொடுத்த ராய் லட்சுமி சிறிது காலமாக தமிழ் சினிமாவில் முகம் காட்ட தவறிவிட்டார்.

ஆனாலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்கள், டிக் டாக் என ரசிகர்களுக்கு விருந்து வைக்கிறார். பொதுவாக டிக்டாக்கில் பல பில்டர்கள் பிரபலம் முயல், நாய், பூனை போல பல பில்டர்கள் வைத்து வீடியோ ரெக்கார்ட் செய்வார்கள். அதே போல் கியூட்டான வீடியோ ஒன்றை தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

அதின் பின் ஹிந்தி பட வசனம் ஒன்றை பேசி அழகாக குழந்தை போல் செய்த டிக்டாக் வீடியோவையும் தன் ஸ்டோரியில் பதிவிட்டிருந்தார். அதன் பின் தற்போது குடையுடன் கூலர்ஸ் போட்டுக்கொண்டு நின்றவாறு ஸ்டைலிஷ் போட்டோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.

என்னதான் நீண்ட நாள் நடிப்பதற்கு கேப் விட்டாலும் இவர் போடும் ஸ்டோரி மற்றும் பதிவுகளை ரசிப்பதற்கு தனி ஒரு பட்டாளமே இருக்கிறது. லாக்டவுனில் பல பிரபலங்கள் இதே போல் தங்களின் சேட்டைகளை சமூக வலையதளங்களில் பதிவிட்டு வருகையில் ராய் லட்சுமியின் பதிவுகள் ரசிகர்களை கவரும் வண்ணம் உள்ளது.


Click it and Unblock the Notifications











