Don't Miss!
- Lifestyle
உங்க கேஸ் அடுப்பில் இருக்கும் விடாப்பிடியான கறைகளை நீக்கி புதியது போல மாற்ற இந்த சாதாரண பொருட்களே போதும்!
- Automobiles
இவ்ளோ கம்மியான விலைக்கு இப்படி ஒரு ஸ்கூட்டரா! ஹோண்டா ஆக்டிவாவின் ஆட்டத்தை முடிக்க போகும் ஹீரோ தயாரிப்பு!
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- News
இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லை.. ஆதரவு இவருக்குத்தான்..அண்ணாமலை ஆலோசனையில் நடந்தது என்ன? பின்னணி
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Sports
"இனியும் இந்தியாவை நம்ப மாட்டோம்..ரொம்ப ஏமாத்துறாங்க" டெஸ்ட் தொடர்.. ஆஸி, வீரர்கள் பரபரப்பு கருத்து
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பிறந்தநாளில் பாரம்பரியமான விஷயத்தை செய்த ராஷி கண்ணா.. குவியும் வாழ்த்து!
சென்னை :மெட்ராஸ் கபே என்ற படத்தின்மூலம் திரைத்துறையில் அறிமுகமாகி தன்னுடைய அழகான சிரிப்பால் அனைவரையும் கவர்ந்து வருபவர் நடிகை ராஷி கண்ணா.
இவர் நடிப்பில் தமிழில் வெளியான இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்கள் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்துள்ளது.
இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிவரும் ராஷி கண்ணா, பாரம்பரியமான விஷயத்தை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தியேட்டரில்
திருச்சிற்றம்பலம்
ஓடுதோ
இல்லையோ..
தனுஷ்,
ராஷி
கன்னா
என்னம்மா
ஓடுறாங்க
பாருங்க!

நடிகை ராஷி கண்ணா
நடிகை ராஷி கண்ணா மெட்ராஸ் கபே என்ற படத்தின் மூலம் தன்னை திரைத்துறையில் அறிமுகப்படுத்திக் கொண்டார். தமிழில் இமைக்கா நொடிகள் என்ற படத்தில் நயன்தாரா, அதர்வா, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்களுடன் இணைந்து இவர் தனது அறிமுகத்தை கொடுத்துள்ளார். முதல் படத்திலேயே தன்னுடைய க்யூட் சிரிப்பு மற்றும் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

தமிழில் அடுத்தடுத்த படங்கள்
தொடர்ந்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு என்ற படத்தில் இவர் நடித்துள்ளார். தொடர்ந்து அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3 ஆகியப் படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். தெலுங்கில் ஓகலூஸ் குசாகுலாட்டே என்ற படத்தில் அறிமுகமான ராஷி கண்ணாவிற்கு அங்கும் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.

ராஷி கண்ணாவின் இன்ஸ்பிரேஷன்
தனக்கு ஷாருக்கானும் ரன்பூர் கபூரும்தான் இன்ஸ்பிரேஷன் என்று கூறும் ராஷி கண்ணா, அவர்களுடன் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அவர்களாலேயே தான் சினிமாவிற்கு நடிக்க வந்ததாகவும் கூறியுள்ளார். முன்னதாக விளம்பரத்துறையிலும் இவர் வேலை செய்துள்ளார். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார் ராஷி கண்ணா.

8 மில்லியன் பாலோயர்கள்
இவரை இன்ஸ்டாகிராமில் 8 மில்லியனுக்கும் அதிகமானோர் பாலோ செய்து வருகின்றனர். இன்றைய தினம் தன்னுடைய 32வது பிறந்தநாளை கொண்டாடிவரும் ராஷி கண்ணா, தன்னுடைய முதல் வேலையாக செடி நட்டு பிறந்தநாளை துவங்கியுள்ளார். இதன் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அவர், இதன்மூலம் தனது பிறந்தநாள் பாரம்பரியமாக மாறிவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ராஷி கண்ணாவின் பிறந்தநாள்
ராஷி கண்ணாவின் பிறந்தநாளையொட்டி அவருக்கு ஏராளமானோர் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் இவருக்கு சிறப்பான கேரக்டர் அமைந்தது. கார்த்தியுடன் சர்தார் படத்திலும் நடித்துள்ளார். தொடர்ந்து யசோதா, சைத்தான் கே பச்சா போன்ற படங்களிலும் நடித்து முடித்துள்ளார்.

பிசியாக நடித்துவரும் ராஷி கண்ணா
தமிழ்,
தெலுங்கு
மற்றும்
இந்தியில்
இவர்
பிசியாக
நடித்து
வருகிறார்.
தமிழ்,
தெலுங்கு
மற்றும்
இந்திக்கு
பொருத்தமான
முகம்
என்பதால்
பான்
இந்தியா
படங்களில்
இவரை
இயக்குநர்கள்
மற்றும்
தயாரிப்பாளர்கள்
தேர்வு
செய்து
நடிக்க
வைத்து
வருகின்றனர்.
தொடர்ந்து
சமூக
வலைதளங்களிலும்
அதிகமான
கவர்ச்சியுடன்
கூடிய
புகைப்படங்களை
வெளியிட்டு
வருகிறார்
ராஷி
கண்ணா.