Raashi Khanna: விருது விழாவில் இப்படியா?.. ராஷி கன்னாவை விளாசும் ரசிகர்கள்!

சென்னை : நடிகை ராஷி கன்னா மெட்ராஸ் கபே படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் அடுத்தடுத்த படத்தில் நடித்து குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்த ஹீரோயினாக மாறி, தெலுங்கு, தமிழ், இந்தி என பல மொழிப்படத்தில் நடித்து வருகிறார். தற்போது இவர் விருது வழங்கும் விழாவிற்கு படு கவர்ச்சியாக உடை அணிந்து சென்றுள்ளார். அந்த போட்டோ இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.

நடிகை ராஷி கன்னா, நயன்தாரா, விஜய்சேதுபதி,அதர்வா நடித்த இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அடங்கமறு, அயோக்யா, துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார் என பல முன்னணி நடிகர்களின் படத்தில் ஜோடி போட்டு நடித்தார். மேலும், தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இயக்கிய ஃபார்ஸி என்ற வெப் தொடரில் ஷாகித் கபூர், விஜய்சேதுபதி, கேகே மேனன், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோருடன் ராஷி கன்னா நடித்திருந்தார்.

Raashi Khanna photo
Photo Credit:

கைவசம் உள்ள படங்கள்: ராஷி கன்னா சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்ட அரண்மனை 4 படத்தில் தமன்னாவுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படம் நல்ல வசூலை அள்ளியது. அந்த படத்தை தொடர்ந்து ஜீவாவிற்கு ஜோடியாக அகஸ்தியா என்ற படத்தில் நடித்தார். அந்த படம் பிப்ரவரி மாதம் தியேட்டரில் வெளியானது. ஆனால், வரவேற்பை பெறவில்லை. இந்தியில் 'தி சபர்மதி ரிப்போர்ட்' என்ற படத்தில் அவர் நடித்துள்ளார். தீரஜ் சர்ணா இயக்கிய இந்த படத்தில் விக்ராந்த் மாஸ்ஸி கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படம் நல்ல வசூலை அள்ளியது. தற்போது ராஷி கன்னா, Telusu Kada என்கிற தெலுங்கு திரைப்படத்திலும், இந்தி படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

படு கிளாமர்: இந்நிலையில் சமூக ஊடகங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ராஷி கன்னாவிற்கு 2024 ஆம் ஆண்டிற்கான Bollywood Hungama Style Icons விருது வழங்கப்பட்டது. இந்த விருது விழாவிற்கு ராஷி கன்னா, கருப்பு உடையில் முன்னழகை அப்பட்டமாக காட்டி, படு கிளாமராக வந்து விருதினையும் பெற்றுக்கொண்டார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றது. அதே போல, ராஷி கன்னா அதே உடையில் இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், பாலிவுட்டு போனதும் ஆளே மாறிவிட்டார்கள், விருதுவிழாவிற்கு இப்படியா போவது என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X